சினிமாவை மிஞ்சிய சம்பவம்! ஃபுல் மப்பில் தாறுமாறாக கார் ஓட்டிய இளைஞர்! கால் முறிந்து வலியால் துடித்த இருவர்.. பகீர் வீடியோ

Published : Feb 24, 2026, 09:26 AM IST

Car Accident: பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த ஒரே ஒரு காவலர் எவ்வளவோ முயற்சி செய்தும் குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க முடியாமல் போராடினார்.

PREV
14
மதுபோதையில் கார் ஓட்டி விபத்து

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு கரையில் அமைந்துள்ள மதுக்கடையில் மூன்று பேர் மது அருந்திவிட்டு காரில் புறப்பட்டனர். அப்போது கமுதி பேருந்து நிலையம் அருகே வரும் போது காரில் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக திடீரென தங்களை மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அதில் பின்னால் அமர்ந்திருந்த இருவர் காரை விட்டு கீழிறங்கி அங்கிருந்து பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளனர்.

24
இருசக்கரம் கார் மீது தாறுமாறாக மோதி சேதம்

அப்போது காரை ஓட்டிய போதை ஆசாமி சண்டை போட்டு சென்ற கூட்டாளிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்றார். அதுமட்டுமல்லாமல் பழக்கடை இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றை மீது தாறுமாறாக மோதி சேதம் ஏற்படுத்தினார். 

34
ஓட்டுநர் மீது பொதுமக்கள் தாக்குதல்

இதில் இரண்டு இளைஞர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டது. கார் தாறுமாறாக வருவதை கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த ஒரே ஒரு காவலர் எவ்வளவோ முயற்சி செய்தும் குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க முடியாமல் போராடினார். ஒரு கட்டத்தில் பழக்கடையில் மோதி நின்ற காரின் கண்ணாடிகளை கட்டையால் சுக்குநூறாக உடைத்து காரை ஓட்டியவரை கீழே இழுத்துப் போட்டு பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.

44
இருவருக்கு கால் முறிவு

இதனால் கமுதி பேருந்து நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கால் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவம் குறித்து கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா பாணியணுில் நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories