Women Self Help Group : மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்து காத்திருந்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு

Published : Sep 11, 2025, 12:35 PM IST

Women Self Help Group :  சுய உதவிக் குழுக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 5 வரை நடைபெறவுள்ளது. 

PREV
14
சுய உதவி குழுவிற்கான திட்டங்கள்

சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அவற்றின் பயனாக இன்று சுய உதவிக் குழுவினர் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர். மேலும் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்கள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் வகையிலும், 

அவர்களின் தயாரிப்புப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், மாநில. மாவட்ட. வட்டார அளவில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிப்புப் பொருட்களின் விற்பனைக் கண்காட்சிகளை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் நடத்தி வருகிறது.

24
நவராத்திரி- மதி விற்பனை கண்காட்சி

இதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களின் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி 12.09.2025 அன்று துவங்குகிறது.

12.09.2025 முதல் 05.10.2025 வரை நடைபெறும் நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம் ஆகியவற்றின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான நவராத்திரி கொலு பொம்மைகள்,

34
நவராத்திரி கொலு பொம்மைகள்

பட்டு, பருத்தி ஆடைகள், செயற்கை ஆபரணங்கள், கைவினைப் பொருட்கள், சணல், காகிதம், பனை ஓலை மற்றும் வாழை நார் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், மரச் சிற்பங்கள். மூலிகைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்திடும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 

அறுசுவை மிகுந்த பாரம்பரிய உணவுகளை உண்டு மகிழ்வதற்கென தனி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 10.00 மணி இரவு 08.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். வார இறுதி நாட்களில் பாரம்பரியம் நிறைந்த சிறப்பான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இலவச வாகன நிறுத்துமிடம் உள்ளது.

44
நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சி

இத்தகைய சிறப்பு மிக்க நவராத்திரி மதி விற்பனைக் கண்காட்சிக்கு அனைவரும் வருகை தந்து, கண்காட்சி கண்டு களித்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யும் தரமான பொருட்களை வாங்கி பயனடைவதோடு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிட கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories