எடப்பாடி பழனிசாமி இமேஜை காலி செய்ய உதயநிதியுடன் கை கோர்த்த டிடிவி தினகரன்!

Published : Sep 11, 2025, 12:11 PM IST

TTV Dhinakaran: அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் வஞ்சப் புகழ்ச்சியையும் வரவேற்றுள்ளார். 

PREV
14
TTV Dhinakaran

மதுரையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: இபிஎஸ் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது உண்மைதான். அதிமுகவின் தொடர் தோல்விகளுக்கு இபிஎஸ் தான் காரணம். இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வஞ்சப் புகழ்ச்சியாக பேசி இருந்தாலும் அவரது கருத்திற்கு டிடிவி தினகரன் வரவேற்பு அளித்துள்ளார்.

24
Edappadi palanisamy

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் பெயர் வேண்டும் என இபிஎஸ் பேசியதற்கு, தாம் அளித்த விளக்கத்தை தவறாக புரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியின் வன்னியர் உள் ஒதுக்கீடு அரசியலால் தென் தமிழகத்தில் சமூக அமைதி கெட்டது. அதனடிப்படையில் நான் சொன்ன கருத்தை தவறாக பிரிந்து கொண்டு சிலர் தூண்டப்பட்டு செயல்பட்டுள்ளார்கள். தேர்தல் வெற்றிக்கு அப்பாற்பட்டு சமரசம் இன்றி தமிழகம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். தேர்தல் நேரத்தில் இபிஎஸ் அரசியல் செய்வதையே சுட்டிக்காட்டினேன் என விளக்கமளித்தார்.

34
O. Panneerselvam

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட கோபம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் அவர் நடந்துகொண்ட விதம் தனக்குப் பிடிக்கவில்லை. அவர் ஒரு நல்ல நண்பர் என்றும், தன்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று கூறினார். மற்ற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்ட பாஜக தமிழ்நாட்டில் எது தேவையென்பதை உணர வேண்டும்.

44
TTV Vs EPS

தங்களை தாங்களே ஏமாற்றி கொண்டு பழனிசாமி என்ற ஒற்றை மனிதருக்கு காவடி தூக்குபவர்கள், அம்மாவுக்கு கோவில் கட்டியவர்களை தான் அம்மா ஆன்மா சும்மா விடாது. செங்கோட்டையனை ஜெயலலிதா நீக்கியதற்கு அரசியல் காரணம் அல்ல. தனிப்பட்ட காரணங்களுக்காகவே நீக்கப்பட்டதாக தெரிவித்தார். செங்கோட்டையன் உள்ளிட்ட யார் எடுக்கிற முயற்சியும் நடக்காது என்பது எனக்கு தெரியும். இபிஎஸ் முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை அம்மாவின் தொண்டர்களுக்கு வெற்றி என்பது எட்டா கனியாக தான் இருக்கும். நாங்கள் அமைகின்ற கூட்டணிதான் ஆட்சியில் அமரப்போகிற கூட்டணி. நாங்கள் சுதந்திரமாக பணி செய்ய விரும்புகிறோம். எங்களுடைய வழி தனிவழி என கூறியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories