Sabareesan Father Passes away: மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனின் தந்தையார் வேதமூர்த்தி (80) காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை. இவரது கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் வசித்து வருகின்றனர். திமுகவின் முக்கியமான அதிகார மையங்களில் ஒருவர் சபரீசன். இதுவரை பொதுவெளியில் அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. பின் இருக்கையில் அமர்ந்தபடியே திமுக கட்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
24
Sabareesan father passes away
இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி (80). இவர் வங்கி அதிகாரியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் வேதமூர்த்தி காலமானார்.
34
DMK leader condoles
வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார்கள். அதேபோல் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில்: எனது மருமகன் சபரீசன் அவர்களின் தந்தையார் வேதமூர்த்தி அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். வேதமூர்த்தி அவர்களின் மறைவு ஒட்டுமொத்தக் குடும்பத்திற்குமே ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தந்தையை இழந்து வாடும் சபரீசன் அவர்களுக்கும், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.