ஏற்காட்டில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய காதலன், உல்லாசமாக இருந்தபோது பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை சேலையால் கழுத்தை நெரித்துக் கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் 35 வயது இளம்பெண் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஊழியர்கள் ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
24
சிசிடிவி காட்சிகள் ஆய்வு
இதனையடுத்து போலீசார் தங்கும் விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது நேற்று மதியம் வாலிபருடன் அந்த இளம்பெண் அறை எடுத்து தங்கியதாகவும், அவர்கள் உணவுக்கு கூட அறையை விட்டு வெளியில் வரவில்லை என்று தெரிவித்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது போலீஸ் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
34
இன்ஸ்டா மூலம் பழக்கம்
கொலை செய்யப்பட்ட பெண் தர்மபுரி மாவட்டம் ஏரியூரை அடுத்த ஏர் கோலபட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி சாலா (33) என்பது தெரியவந்தது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமணமான இவருக்கும் சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பார்த்திபன் (35) என்பவருடன் இன்ஸ்டா மூலம் சாலாவுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
இதனையடுத்து சாலா, பார்த்திபன் ஆகியோர் நேற்று ஏற்காடுக்கு வந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் சாலா பார்த்திபனிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். பணம் கொடுத்தால் தான் நாம் மீண்டும் உல்லாசமாக இருக்க முடியும் என்று சாலா திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பார்த்திபன் சேலையால் கழுத்தை நெரித்து சாலாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். இதையடுத்து போலீசார் இளம்பிள்ளைக்கு விரைந்து சென்று பார்த்திபனை சுற்றி வளைத்து கைது செய்தனர். உல்லாசத்தின் பணம் கேட்டு டார்ச்சர் செய்த இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலை நடந்த தனியார் தங்கும் விடுதிக்கு போலீசார், தாசில்தார் செல்வராஜ் முன்னிலையில் சீல் வைத்தனர்.