Crime: மருமகனை மடக்கிய 45 வயது மாமியார் ஜோதி.! நேரம் கிடைக்கும் போதெல்லாம்.. விஷயம் தெரிந்த மாமனார்.. இறுதியில் நடந்த பகீர்

Published : Jan 14, 2026, 10:49 AM IST

தர்மபுரியில் காணாமல் போனதாக தேடப்பட்ட மெடிக்கல் ஷாப் ஊழியர், ஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். போலீசாரின் விசாரணையில், மாமியார்-மருமகன் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், மனைவி, மருமகன் உள்ளிட்ட 6 பேர் சேர்ந்து அவரை கொலை செய்தது அம்பலமானது.

PREV
14
ஆறுமுகம் திடீரென மாயம்

தர்மபுரி மாவட்டம் எரங்காட்டு கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (47). இவர் மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு ஜோதி (45) என்ற மனைவியும், இரண்டு மகள், இரண்டு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 7ம் தேதி வழக்கம் போல் வேலைக்கு சென்ற ஆறுமுகம் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து வேறு வழியில்லாமல் தர்மபுரி டவுன் காவல் நிலையத்தில் கணவரை காணவில்லை என்று மனைவி புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

24
காவல் நிலையத்தில் புகார்

இதனிடையே ஏரியில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் காணாமல் போன ஆறுமுகம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மருத்துவர்கள் அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

34
கள்ளத்தொடர்பு

சந்தேகத்தின் பேரில் ஆறுமுகத்தின் மனைவி ஜோதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மருமகன் சீதாராமன் உள்ளிட்ட 6 பேரும் சேர்ந்து கொலை செய்து ஏரியில் வீசியது தெரியவந்தது. அதாவது மருமகன் மாமியார் ஜோதியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் கணவர் ஆறுமுகத்திற்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார்.

44
மனைவி உட்பட 6 பேர் கைது

இந்நிலையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டு கடந்த 7ம் தேதி சீதாராமன், அவரது நண்பர்கள் 4 பேர் மற்றும் ஜோதி ஆகியோர் ஆறுமுகத்தை கடத்தி சென்று கல்லால் தாக்கி கொலை செய்து உடலை ஏரியில் வீசியது போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து, ஆறுமுகம் மனைவி ஜோதி (45), சீதாராமன்(33), அவரது நண்பர்களான சரவணன் (37), ஜெய்சங்கர் (32), பிரவீன்குமார் (25), முருகன் (26) ஆகிய 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories