சென்னையில் அதிர்ச்சி! மனைவிக்கு தலைக்கு ஏறிய போதை! கணவனை கதறியும் விடாமல்!

Published : Sep 30, 2025, 01:09 PM IST

Chennai Crime: சைதாப்பேட்டையில், தன்னுடன் பணியாற்றும் நபருடன் பழகுவதை கண்டித்த கணவரை, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை செய்தார். கொலை முயற்சி செய்த கணவரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்துள்ளது. 

PREV
14
ஒடிசா மாநில ஜோடி

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரகலாத் சர்தார்(42). கட்டுமான தொழிலாளி. இவரது முதல் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பிங்கி(36) என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்கள் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் புதிதாக கட்டிடத்தில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்தது.

24
மனைவி கண்டித்த கணவர்

இந்நிலையில் பிரகலாத் சர்தார் உடன் பணியாற்றும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பவருடன் இரண்டாவது மனைவி பிங்கி மார்க்கெட்டுக்கு சென்று வீட்டிற்கு தேவையான காய்கறிகளை வாங்கி வந்துள்ளார். அதேநேரம் பப்லுவுடன் பிங்கி நெருங்கி பழகி வந்ததை கணவர் பிரகலாத் சர்தார் கண்டித்ததாக கூறப்படுகிறது.

34
மது அருந்தும் போது தகராறு

இந்நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து கணவன் மனைவி ஆகியோர் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் மது அருந்தினர். அப்போது தனது மனைவியிடம் பப்லுவுடன் பழகுவதை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பிரகலாத் சர்தார் தனது மனைவி பிங்கியின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

44
மனைவி கைது

அப்போது உயிருக்கு போராடிய பிங்கி திடீரென்று பக்கத்தில் இருந்த கத்தியை எடுத்து சர்தாரின் கழுத்தில் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சர்தார் கீழே சரிந்து விழுந்து அலறி கூச்சலிட்டுள்ளார். பின்னர் அவரை மீட்டு சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். மருத்துவமனையில் ரத்த காயத்திற்கு கட்டு போடாமல் மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். ஆனால் கத்தி குத்தப்பட்ட இடத்தில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறியது. இதனால் மூச்சு பேச்சு இல்லாமல் இருந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சர்தார் எற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக குமரன்நகர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கணவனை கத்தியால் குத்திக் கொன்ற பிங்கி கைது செய்யப்பட்டார்.

Read more Photos on
click me!

Recommended Stories