eps vs stalin
அரசியல் கட்சியும் தேர்தலும்
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பர்களும் இல்லை என்பதற்கு ஏற்றார் போல ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் இடம்மாறி வருகிறது. தொகுத்திக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கட்சியின் தலைமையில் கூட்டணி அமைத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணி வலுவாக உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதுலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தது.
dmk alliance and admk
திமுகவின் வெற்றி கூட்டணி
அப்போது நூழிலையில் ஆட்சியை கைப்பற்ற முடியாத நிலை உருவானது. இதனையடுத்து அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில் இந்த கூட்டணிக்கு கை மேல் வெற்றி கிட்டியது. நாடாளுமன்ற தேர்தல் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என தொடர் வெற்றியாக அமைந்துள்ளது. எனவே இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக உருவாகியுள்ளது. இந்ந நிலையில் தான் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இப்போதே கூட்டணி கணக்கை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது.
Aadhav Arjuna
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகளின் கட்சியில் இருந்து ஆட்சியில் பங்கு என்ற குரல் எழுந்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா கூட்டணி ஆட்சி தொடர்பாக அடிக்கடி பேசி வருகிறார். இதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், திருமாவளவன் ஆதவ் அர்ஜூனா பேச்சை பின்பக்கத்தில் இருந்து இயக்குவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே விடுதலை சிறுத்தைகள் இரண்டாக பிரிந்து விடும் என கூறப்பட்டு வருகிறது.
DMK allaince
ஆட்சியில் பங்கு- தேர்தல் சூழ்நிலை
இந்த நிலை இதே கருத்தை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ஆட்சியில் பங்கு என்பது தேர்தலுக்கு பிறகு உள்ள சூழ்நிலையை பொறுத்து தானாக அமையும், இப்போது அதைப்பற்றி பேசுவது எல்லாம் பத்திரிக்கையின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக, எப்போதும் தலைப்பு செய்தியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடுக்கும் நிகழ்வுகள்,
DMK allaince fixed
இரண்டாக உடைந்து விடுமோ.?
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜூனா குரல் தான் அதை துவக்கி உள்ளது. ஆதவ் அர்ஜூனா தனித்தன்மை வாய்ந்தவர், திறமையானவர் என்பதில் மாற்று கருத்து இல்லை, அவர் தற்போது விசிகவில் ஊடுருவி கொண்டு உள்ளார். விடுதலை சிறுத்தை கட்சியை இன்று இரண்டாக உடைத்து விடுவாரோ சந்தேகம் உள்ளது. எனவே விடுதுறை சிறுத்தை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ramadoss
திமுக- பாமக
இதே போல கடந்த தேர்தல்களில் அதிமுக- பாஜக என மாறி மாறி கூட்டணி அமைத்து வரும் பாமக 2026ஆம் ஆண்டு எந்த கூட்டணியில் இணையும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒரே மேடையில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விழுப்புரத்தில் வருகிற நவம்பர் 29 ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் 21 சமூக நீதிப் போராளிகள் மணிமண்டபம் மற்றும் முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி நினைவு அரங்கம் திறக்கப்படவுள்ளது.
stalin and ramadoss
திமுகவின் நிலை என்ன.?
இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணிமண்டபம் மற்றும் நினைவு அரங்கத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும் பாமக நிறுவனர் ராமதாசுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட இருப்பதாகவும், விழா அழைப்பிதழில் ராமதாஸ் மற்றும் அன்புமணி பெயர் அச்சிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே ஆட்சியில் பங்கு என விடுதலை சிறுத்தைகள் முரண்டு பிடித்து வரும் திமுகவின் புதிய கணக்கு பழிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.