இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு புரட்டிப்போடப்போகுது மழை.! ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

First Published | Nov 25, 2024, 7:04 AM IST

வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால் டெல்டா மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

rain

வங்க கடலில் புயல்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில இந்த பருவமழை காலத்தில் முதலாவது புயல் உருவாக வாய்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள் முதல் வட மாவட்டங்கள் வரை கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் மழை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

வங்க கடலில் உருவான தாழ்வு பகுதி  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் மேலும் புயலாக  மாறவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் கணித்துள்ளது. 
 

rain

டெல்டா மாவட்டங்களில் கன மழை

இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கடலூர், விழுப்புரம், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. 


rain

கன முதல் மிக கன மழை

இதே போல நாளை (26ம் தேதி) கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

rain

சென்னையிலும் மழை

நாளை மறுதினம் ( 27ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது,

rain

ரெட் அலர்ட்- வெதர்மேன் எச்சரிக்கை

இதனிடைய வங்க கடலில் உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்டா மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) இரவு தொடங்கி வருகிற 26 மற்றும் 27ஆம் தேதிகளில் தீவிர மழை பெய்யும் என கூறியுள்ளார்.  நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் வருகின  26, 27 தேதிகளில் மிக கனமழை பெய்யும்.

மேலும் 26 தேதி தீவிர மழைக்கு வாய்ப்பு உள்ளது. டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் 26 மற்றும் 27ம் தேதிகளில் IMD ரெட் அலர்ட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார். அதே நேரத்தில் சென்னைக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு இல்லையென கூறியுள்ளார்,
 

Latest Videos

click me!