வாகன ஓட்டிகளுக்கு முக்கிய செய்தி! நாளை முதல் போக்குவரத்து மாற்றம்! எந்தெந்த பகுதியில்? எதற்காக?

First Published | Nov 24, 2024, 6:21 PM IST

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் காரணமாக பனகல் பார்க் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Traffic Diversion

சென்னையில் மெட்ரோ பணி, போக்குவரத்து நெரிசல், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு அவ்வப்போது போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Panagal Park

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள், பனகல் பார்க் பகுதியில் நடைபெற்று வருகிறது. பனகல் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வெளியேறும் அமைப்புக்கான கட்டுமான பணிகள் வெங்கட்நாராயண சாலை மற்றும் சிவஞானம் தெரு சந்திப்பில் உள்ள ஜே.ஒய்.எம். திருமண மண்டபம் அருகில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்றன. அதாவது நாளை முதல் டிசம்பர் 1ம் தேதி வரை 7 நாட்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளன.


Chennai traffic diversion

அதன்படி, வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக வெங்கட் நாராயணா சாலைக்கு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளன. மாறாக அவர்கள் நேராக தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை வழியாக சென்று வெங்கட்நாராயணா சாலையை அடைந்து அவர்கள் தங்கள் இலக்கை அடையலாம். 

CMRL work

உள்ளூர் மக்களின் வசதிக்காக வாகனங்கள் தியாகராய சாலையில் இருந்து சிவஞானம் தெரு வழியாக ஜே.ஒய்.எம். கல்யாண மண்டபம் வரை இரு திசைகளிலும் செல்ல அனுமதிக்கப்படும் வாகன ஓட்டுநர்கள் ஒத்துழைக்குமாறு போக்குவரத்து போலீசார் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!