RATION CARD
தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உணவு பொருட்கள்
தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ரேஷன் கடைகளின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானியம் மற்றும் இலவசமாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடிக்கணக்கான மக்கள் மாதந்தோறும் பயன்பெற்று வருகிறார்கள். அரிசி, கோதுமை, பருப்பு, சக்கரை,பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 39 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 793 நியாய விலை கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மொத்தமாக இரண்டு கோடியே 25 லட்சத்து 17 ஆயிரத்து 727 குடும்ப அட்டைகளின் மூலமாக 7 கோடிக்கும் மேற்பட்ட பயனாளிகள் உணவு பொருட்களை பெற்று வருகிறார்கள்.
RATION
ரேஷன் கார்டுகள் ரத்து
மேலும் பொங்கல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போது அரசின் சார்பாக நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே போலியான ரேஷன் கார்டுகளை கண்டறிய கண்டிப்பாக அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும் கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி வாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலத்திற்குள் ரேஷன் கார்டில் அப்டேட் செய்யப்படவில்லையென்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ration shop grocery
ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள்
இந்தநிலையில் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் மளிகைக்கடைகளில் விறக்கக்கூடிய டீத்தூள், உப்பு, உளுந்து, சோப், மைதா, ரவை போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த பொருட்களை உணவு பொருட்களை வாங்க வரக்கூடியவர்களிடம் கட்டாயம் வாங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கட்டாயம் படுத்துவதாக தகவல் வெளியானது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு தீபாவளி மளிகை தொகுப்பானது விநியோகம் செய்யப்பட்டது.
RATION SHOP grocery sales
திருப்பி அனுப்ப உத்தரவு
தற்போது விற்பனை செய்யப்பட்ட பொருட்களை தவிர்த்து கையிருப்பில் உள்ள மீதமுள்ள பொருட்களை கட்டாயப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் வந்தது. இந்த நிலையில் சிறப்பு தொகுப்பில் விற்பனை ஆகாமல் உள்ள பொருட்களை திருப்பி அனுப்ப கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
எனவே ரேஷன் கடைக்கு வரும் மக்களிடம் கட்டாயம் செய்து விற்பனை செய்யக்கூடாது எனவும் மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடைகளில் நோட்டீஸ் ஒட்டும்படி அறிவுறுத்தப்பட்டுளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.