மணல் கொள்ளை- அமலாக்கத்துறை சோதனை
தமிழகம் முழுவதும் மணல் கொள்ளைகள் முழ்வீச்சில் அரங்கேறி வருவதாக தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. மணல் அதிகம் அள்ளியதால், பல ஆறுகளில் நீரோட்டம் பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கனிம வளம் திருடு போவது கண்காணித்து தடுக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளும் வேடிக்கை பார்ப்பதாக புகார் வந்தது.
இந்தநிலையில் தான் பல்லாயிரம் கோடிக்கு சட்டவிரோத வரி ஏய்ப்பு மற்றும் மணல் கனிமவளக்கொள்ளை நடைபெற்றதின் அடிப்படையில் அமலாக்கத்துறை மேற்கொண்ட ரெய்டுகளின் போது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தெரியவந்தது.