டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு

First Published | Nov 24, 2024, 8:08 AM IST

தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

tnpsc

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு

தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
 

TNPSC

ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை

மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இருப்பதும் பல ஆண்டுகளுக்கு பிறகு தெரியவருகிறது. இதனால் அந்த பணியாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 

Latest Videos


tnpsc

நேரில் விசாரணை செய்யும் போலீஸ்

மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் சான்றிதழ் சரிபார்க்கும் பணியின் போது பல்வேறு குளறுபடிகள் இருப்பதும் தெரியவருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் இனி அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு போலீசார் சார்பாக நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை அறிவித்து உள்ளது.  

அந்த வகையில்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் பணியில் சேர தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  கட்டாயம் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக  கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

POLICE

போலீசார் ஓகே சொன்னால் தான் வேலை

இதனை தொடர்ந்து அரசுப் பணியில் சேரும் பணியாளர்களின் போலீசார் சார்பில் நேரடியாக வீட்டிற்கே சென்று சரிபார்ப்பு பணி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த நேரடி விசாரணையின் போது சான்றிதழ், குற்ற வழக்குகள் என அனைத்தும் விசாரிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த போலீசார் விசாரணையின் போது அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர் தொடர்பாக ரிப்போர்ட் சரியாக இல்லாத பட்சத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்தகட்ட விசாரணை செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது. 

click me!