இந்த சூழலில் பலரும் எதிர்பார்த்த வண்ணம் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக தளபதி விஜயின் முதல் அரசியல் மாநில மாநாடு நடைபெற்றது. யாருமே எதிர்பாராத வண்ணம் அதிரடியான பேச்சுகளை பேசி அசத்தியிருந்தார் விஜய். அது மட்டுமில்லாமல் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாக தாக்கிய அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.