ஒரு கிலோ பெரிய வெங்காயம் விலை இவ்வளவா.? அப்போ தக்காளி விலை என்ன தெரியுமா.?

First Published | Nov 24, 2024, 7:17 AM IST

கோயம்பேடு சந்தையில் வெங்காய வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ளது. காரிஃப் பயிர் வெங்காயம் வரத் தொடங்கியதால் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்ட பிற காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது.

tomato onion

வெங்காயத்தோடு போட்டி போட்ட தக்காளி

காய்கறிகள் இல்லாமல் சமையல் என்பது சாத்தியம் இல்லாத காரியம். அந்த வகையில் ரசம் முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி மற்றும் வெங்காயத்தின் பங்கு முக்கியமானது. மற்ற காய்கறிகளை விட இந்த தக்காளி மற்றும் வெங்காயத்தை தான் அதிக அளவு வாங்குவார்கள்.  இந்தநிலையில் வெங்காயத்தின் விலையானது தொடர்ந்து உச்சத்தில் இருப்பது இல்லத்தரசிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் வெங்காயத்தின் விலையை விட தக்காளி விலை அதிகரித்தது. ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டியது. ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்ததையடுத்து தக்காளி விலையானது சரசரவென சரிந்தது. ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையானது.

வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

ஆனால் வெங்காயத்தின் விலை மட்டும் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. கடந்த 3 மாதங்களாக விலையானது குறையாமல் உள்ளது. வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக மத்திய அரசு சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் ஒரு கிலோ 35 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இந்த வெங்காயம் விற்பனை அனைத்து தரப்பு மக்களுக்கும் முழுமையாக சென்று சேரவில்லை. இருந்த போதும் மத்திய அரசு ரயில்களின் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு டன் கணக்கில் வெங்காயத்தை குறைந்த விலையில் விற்பனை செய்ய அனுப்பி வருகிறது.
 

Tap to resize

ONION

ஒரு கிலோ வெங்காயம் விலை என்ன.?

கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து 45 வாகனங்களில் வெங்காயம் கூடுதலாக வரவழைக்கப்பட்டது. இதனால் வெங்காயத்தின் விலையானது சற்று குறைந்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனையானது.

அதுவும் வெங்காயத்தின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. சிறிய அளவிலான வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சற்று பெரிய வெங்காயம் 80 ரூபாய்க்கும், பெரிய அளவிலான வெங்காயம் 100 ரூபாயை தாண்டியும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெங்காயத்தின் விலையானது எப்போது குறையும் என மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
 

onion

குறையப்போகுது வெங்காயம் விலை

இந்த நிலையில் மக்களுக்கு குட் நியூஸ் சொல்லும் வகையில் மீண்டும் காரிஃப் பயிர் வெங்காய வரத்து வர தொடங்கவுள்ளதாகவும் இதன் காரணமாக வரும் நாட்களில்  வெங்காய விலை குறையும் என எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில்  பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 800 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

காய்கறி விலை என்ன.?

வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

காலிஃப்ளவர் ஒன்று 15 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவர்கள் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 80 முதல்  150 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!