தேர்வர்கள் கவனத்திற்கு! இந்த தப்பை தவறிக்கூட செய்திடாதீங்க! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published : Nov 24, 2024, 12:48 PM ISTUpdated : Nov 24, 2024, 02:08 PM IST

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வுகளில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தேர்வர்கள் விடைத்தாளில் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

PREV
15
தேர்வர்கள் கவனத்திற்கு! இந்த தப்பை தவறிக்கூட செய்திடாதீங்க! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TNPSC

டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. இதில், குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது.  குறைந்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு என்றாலும் எப்படியாவது அரசு பணியில் வாங்கி விட வேண்டும் என்ற கனவுடன் பல லட்சம் இளைஞர்கள் தேர்வு எழுதுகின்றனர். 

25
TNPSC Exam

இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் தேர்வின் போது தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களை பூர்த்தி செய்யவும் விடைகளை குறிக்கவும் கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 

35
TNPSC Group 2

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பில்: குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் கருப்பு மை பேனாவை (black ink pen) (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும். 
 

45
TNPSC News

தேர்வர்கள் விடைப்புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்பு மைப்பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

55
TNPSC Group 2 Exam

தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரேவகை கொண்ட கருப்பு மைப்பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்பு மை பேனாக்களைத் தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!

Recommended Stories