Tamilnadu Government
ஒவ்வொரு ஆண்டும் தொடங்குவதற்கு முன்னதாக அந்த ஆண்டில் வரும் விடுமுறை தினங்கள் முக்கிய பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை குறித்து மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2024ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் 2025ம் ஆண்டு தொடங்க இருக்கும் நிலையில் பொது விடுமுறை நாட்கள் குறித்த பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Government Employee
அரசு பொது விடுமுறை நாட்களில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்களும் மூடப்படும். இது, மாநில அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் கழகங்கள் மற்றும் வாரியங்களுக்கு பொருந்தும். 2025ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday Government Holiday
இந்த பொது விடுமுறை நாட்களில் குடியரசு தினம், தெலுங்கு வருட பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய மூன்று விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமையிலும், பக்ரீத், கிருஷ்ணர் ஜெயந்தி 2 விடுமுறைகள் சனிக்கிழமையும் வருகிறது.
Pongal Festival
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜனவரி 14 செவ்வாக்கிழமை தை பொங்கல், ஜனவரி 15 புதன் திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 வியாழன் உழவர் திருநாள் வருகிறது. அரசு மனசு வைத்தால் அரசு ஊழியர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் 9 நாள் விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
Pongal Holiday
அதாவது பொங்கல் முந்தைய நாள் போகி பண்டிகை ஜனவரி 13ம் தேதி வருகிறது. அன்றைய தினம் அரசு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்புள்ளது. ஜனவரி 11, 12ம் தேதிகள் சனி, ஞாயிறு விடுமுறையாகி விடுகிறது. இடையில் ஜனவரி 17 வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை வந்துவிடும். அப்படி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கும் பட்சத்தில் மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.
School Student
அப்படி விடுமுறை அளிக்காத பட்சத்தில் போகி பண்டிகைக்கு மட்டும் விடுமுறை அறிவித்தால் பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும்
Holidays
மேலும், நடப்பு 2024ம் ஆண்டை விட 2025ல் விடுமுறை நாட்களில் ஒரு நாள் குறைவு. ஏனெனில், காந்தி ஜெயந்தி மற்றும் விஜயதசமி ஒரே நாளில் வருவதால் விடுமுறை எண்ணிக்கையில் ஒன்று குறைந்துள்ளது.