ஒரு கிலோ முருங்கைக்காய் 240 ரூபாயா.? தக்காளி, வெங்காயம், இஞ்சி விலையும் இவ்வளவா.?

First Published | Nov 25, 2024, 7:37 AM IST

கோயம்பேடு சந்தையில் வெங்காயம் மற்றும் முருங்கைக்காய் விலை உயர்ந்துள்ளது. தக்காளி விலை சற்று குறைந்துள்ள நிலையில், மற்ற காய்கறிகளின் விலையும் சிறிது அதிகரித்துள்ளது.

TOMATO

காய்கறி விலை

காய்கறிகள் சமையலுக்கு முக்கிய தேவையாகும். அந்த வகையில் சாம்பார், கூட்டு, பொரியல் என எது சமைத்தாலும் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கும், இந்த நிலையில் தங்காளி மற்றும் வெங்காயத்தின் விலையானது போட்டி போட்டு கடந்த மாதம் உயர்ந்தது. அந்த வகையில் 100 ரூபாயை எட்டியது. இதனால் கிலோ கணக்கில் வாங்கி சென்ற மக்கள் அரை கிலோ என்ற அளவில் வாங்கி செல்லும் நிலை உருவானது. இதனையடுத்து தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலையும் சரசர வென சரிந்தது.

ONION

குறைந்த தக்காளி விலை- உயர்ந்த வெங்காயம்

அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது தக்காளி விலை சற்று அதிகரித்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெங்காய்த்தின் விலை மட்டும் தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது. மிகப்பெரிய காய்கறி சந்தையான கோயம்பேட்டில் வெங்காயத்தின் வரத்து மிகவும் குறைந்துள்ளது. அந்த வகையில் வெங்காயம் தரம் குறைந்த வெங்காயம் மட்டுமே வருகிறது. அந்த வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 60 ரூபாய் முதல்70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Latest Videos


Onion Price Today

வெங்காயம் விலை எப்போது குறையும்

இதுவே தரம் உயர்ந்த வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. எனவே வெங்காயத்தின் விலை எப்போது குறையும் என மக்கள் காத்துள்ளனர். இந்த நிலையில் பச்சை காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் முருங்கைக்காய் விலை உச்சத்தை தொட்டுள்ளது. மழை மற்றும் பனியின் காரணமாக முருங்கை மரத்தில் பூக்கள் நிற்காமல் உதிர்ந்து விடும் நிலை உள்ளது.

drumsticks

உச்சத்தில் முருங்கைக்காய் விலை

இதன் காரணமாக முருங்கை உற்பத்தை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. கடந்த வாரம் ஒரு கிலோ முருங்கைக்காய் 40 முதல் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,

தக்காளி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

VEGETABLE

காய்கறி விலை என்ன.?

பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒன்று  15 முதல் 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

முருங்கைக்காய் ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 130 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்  சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை ஆகிறது

click me!