தமிழகத்தில் நிலவும் பனிப்பொழிவுக்கு மத்தியில், பொங்கல் பண்டிகைக்கு மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மன்னார் வளைகுடா வளிமண்டல சுழற்சியால் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், ஜனவரி 15 முதல் வறண்ட வானிலையே நிலவும்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிபொழிவு நிலவி வந்த நிலையில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்தது. இதனால் பனிபொழிவு சற்று குறைந்திருந்த நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு மழை பெய்யுமா? என்பது குறித்து வானிலை மையம் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளது.
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
அதாவது வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
35
சென்னை வானிலை நிலவரம்
இதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அதேபோல் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.