வரிந்துகட்டி விஜய்க்காக குரல் கொடுக்கும் காங். தலைவர்கள்
குறிப்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் உட்பட பல தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “‘ஜன நாயகன்’திரைப்படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதலாகும்.
திரு. மோடி, தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் உங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.