எடப்பாடிக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி.! சைலண்ட் மோடில் வேலுமணி, தங்கமணி- கலக்கத்தில் அதிமுக ர.ரக்கள்

Published : Sep 06, 2025, 10:02 AM IST

அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், மூத்த தலைவர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்துள்ளார். 

PREV
15
அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 210 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, தேமுதிக, பாமக என அனைத்து கட்சிகளும் மக்களை சந்திக்க புறப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அதிமுகவில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தொடங்கிய அதிகார மோதல் இன்னும் முடிவடையவில்லை. அந்த வகையில் அதிமுக தலைமை பொறுப்பை இபிஎஸ் கைப்பற்றிய நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு தனி அணியாக உள்ளனர்.

25
அதிமுகவின் தோல்வி காரணம் என்ன.?

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர் சட்ட போராட்டங்களை நடத்திய ஓ பன்னீர் செல்வம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் அதிமுகவில் இணைய தயார் எனவும், எந்த பொறுப்பும் வேண்டாம் என அறிவித்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் இணைக்க வாய்ப்பே இல்லையென உறுதியாக தெரிவித்து விட்டார். 

இதன் காரணமாக தேர்தல் களத்தில் வாக்குகள் சிதறி அதிமுக தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து வருகிறது. எனவே பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

35
செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி மேல் அதிர்ச்சி

இது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் நேற்று தனது கருத்தை தெரிவித்து எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்த வகையில் கோவத்தில் சென்ற அதிமுக நிர்வாகிகளை வீடு தேடி மீண்டும் கட்சிக்கு அழைத்து வந்த தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, அவர்களை விட இங்கு யாரும் பெரிய தலைவர்கள் இல்லை.

 எனவே பிரிந்து சென்ற தலைவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் அப்போது தான் அதிமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். இந்த பணியை எடப்பாடி பழனிசாமி 10 நாட்களில் தொடங்க வேண்டும். இல்லையென்றால் நானே அந்த பணியை தொடங்க இருப்பதாக கெடு விதித்திருந்தார்.

45
சீறிய செங்கோட்டையன்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் செங்கோட்டையன் பேச்சு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருப்பதாகவும் எனவே அவரை கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினால் அதிமுக மேலும் கொங்கு மண்டலத்தில் பலத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

 மேலும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களை இணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்த தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் செங்கோட்டையன் பேச்சுக்கு தற்போது எந்த வித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகின்றனர். எனவே செங்கோட்டையன் கருத்திற்கு ஆதரவாகவே வேலுமணி மற்றும் தங்கமணி இருப்பாக கூறப்படுகிறது. 

55
நடவடிக்கை எடுப்பாரா எடப்பாடி.?

எனவே அதிமுக வெற்றி பெற வேண்டும் அதற்கு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான் செங்கோட்டையனின் கருத்தாக உள்ளது. எனவே செங்கோட்டையனை நீக்கும் பட்சத்தில் அதிமுக இரண்டாக உடைய வாய்ப்பு உள்ளது. 

அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையனுக்கே இந்த நிலை என்றால் மற்ற தலைவர்களின் நிலை என்ன ஆகும் கேள்வி எழுப்பியுள்ளது. எனவே தற்போது உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைக்கு மேல் கத்தி தொங்குவது உறுதியாகி உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories