தவெகவிற்கு தலைவர் விஜய்யா.? பிரசாந்த் கிஷோரா.? இவ்வளவு முக்கியத்துவம் ஏன்.? ஷாக் ஆகும் நிர்வாகிகள்

Published : Feb 26, 2025, 01:36 PM IST

விஜய், 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க திமுகவை வீழ்த்த வியூகம் வகுக்க பிரசாந்த் கிஷோரை நியமித்துள்ளார். பிரசாந்த் கிஷோருக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
15
தவெகவிற்கு தலைவர் விஜய்யா.? பிரசாந்த் கிஷோரா.?  இவ்வளவு முக்கியத்துவம் ஏன்.? ஷாக் ஆகும்  நிர்வாகிகள்
தவெகவிற்கு தலைவர் விஜய்யா.? பிரசாந்த் கிஷோரா.? குழப்பத்தில் நிர்வாகிகள்

தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு ஆட்சியை பிடிப்போம் என்ற சூளுரையோடு அரசியல் களத்தில் இறங்கியுள்ளார் விஜய். அந்த வகையில் திமுக தான் தனது எதிரி எனவும் அந்த கட்சியை வீழ்த்துவோம் என தெரிவித்து வருகிறார்.  திமுகவிற்கு இணையாக வட்டம், பகுதி, நகரம், மாவட்டம், மாநிலம் என அனைத்து வகையிலும் அடுத்தடுத்து நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இந்த நிலையில் திமுகவை வீழ்த்த பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை தவெக இறக்கியுள்ளது. 

25
யார் இந்த பிரசாந்த் கிஷோர்

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வெற்றிக்கு முக்கிய பங்கு விகித்தவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பல நூறு கோடி ரூபாய் அவரது நிறுவனத்திற்கு திமுக சார்பில் வழங்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் பிரச்சாரங்கள், தேர்தல் வியூகங்கள் என களப்பணியில் திட்டம் பிரசாந்த கிஷோர் நிறுவனம் வகுத்து கொடுக்கப்பட்டது. ஆனால் திமுகவின் எந்த மேடைகளிலும் பிரசாந்த் கிஷோரை திமுக ஏற்றவில்லை. திரைமறைவில் வைத்தே இயக்கி வந்தது.
 

35
தவெக ஆலோசகராக பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையில் தவெகவில் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை இறக்கியுள்ளார் விஜய், இதற்காக பல கட்ட பேச்சுவார்த்தை கடந்த சில வாரங்களாகவே நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தவெகவின் இரண்டாம் ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் முக்கிய பங்கு வகித்தார். விஜய்க்கு இணையாக பிரசாந்த் கிஷோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விஜய்யோடு ஒன்றாகவே விழா அரங்கிற்கு வந்தவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேடைக்கு விஜய் சென்ற பிறகு மேடையில் இருந்து விஜய்யே மைக்கை பிடித்து பிரசாந்த் கிஷோர் மேடைக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
 

45
பிரசாந்த் கிஷோருக்கு முக்கியத்துவம்

தவெக நிர்வாகிகளை விட பிரசாந்த் கிஷோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது பலரும் ஆச்சர்யமாக பார்த்தனர். பிரசாந்த் கிஷோர் கோடிக்கணக்கான பணம்பெற்றுக்கொண்டு கட்சிகளுக்கு வேலை செய்யும் ஏஜெண்ட். அவருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  

மேலும் பிரசாந்த் கிஷோர் பிகாரில் தேர்தலில் போட்டியிட்டு டெபாசிட் கூட வாங்கவில்லை, உள்ளூரில் விலை போகாத பிரசாந்த் கிஷோரை விஜய் வரவழைத்துள்ளதாகவும் கிண்டல் அடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

55
எப்படி எதிர்கொள்வது எங்களுக்கு தெரியும்

 பிரசாந்த் கிஷோர் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பணியாற்றி விட்டு தற்போது மாற்று கட்சியில் பணியாற்ற சென்றுள்ளார், அவரை எப்படி எதிர்கொள்வது என்பது தமிழக முதல்வருக்கு தெரியும். தி.மு.க முதன்மைச் செயலாளருமான அமைச்சருமான கே.என் நேரு தெரிவித்துள்ளார்

Read more Photos on
click me!

Recommended Stories