இபிஎஸ் ஸ்டைலிலேயே நான் போட்டு காட்டுறேன்..! செங்கோட்டையனை அடுத்து வெளியேறப்போவது யார்? டிடிவி.தினகரன் பரபர!

Published : Nov 03, 2025, 09:10 AM IST

TTV Dhinakaran: டிடிவி தினகரன் எடப்பாடி பழனிச்சாமி ஒரு துரோகி என்றும், அவருக்கு நோபல் பரிசு தான் கொடுக்க வேண்டும் என்றும் கடுமையாக விமர்சித்தார். சசிகலாவிற்கு துரோகம் செய்தவர், கூட்டணி வைத்தால் விஜய்க்கும் துரோகம் செய்வார்.

PREV
17
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஆர்கேநகர் இடைத்தேர்தலில் நான் முதல்முறையாக தொப்பி சின்னத்தில் நின்றபோது பழனிசாமி எனக்காக ஓட்டு கேட்டார். பொதுவாக ஓட்டு கேட்கும்போது இவர் நல்லவர், வல்லவர், அம்மாவின் தொகுதியில் போட்டியிடுகிறார். அம்மா விட்டு சென்ற பணிகளை நிறைவேற்ற இவருக்கு வாக்களியுங்கள் என்று தானே கேட்பார்.அதையெல்லாம் தாண்டி அப்போது அவர் கூறிய வீடியோவை காண்பித்தார். அதில் எடப்பாடி பழனிசாமி இதயதெய்வம் அம்மா சட்டமன்றத்தில் பேசும்போது எனக்கு பின்னால் அதிமுக 100 ஆண்டுகள் ஆட்சி தொடரும் என்று குறிப்பிட்டார். அந்த செய்தியை நினைவாக்கும் நேரம் இது. அம்மாவின் வாக்கு வேத வாக்கு. அந்த வேத வாக்கை நாம் அத்தனை பேரும் ஒருமித்த கருத்தோடு, அண்ணன் டிடிவி தினகரனை வெற்றி பெற வைத்து அம்மாவுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்றார்.

27
அதிமுகவை காக்க வந்தவர் சொல்லியவர் இபிஎஸ்

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுகவை காக்க வந்தவர் டிடிவி என பேசிவிட்டு ஏப்ரல் மாதத்தில் என்னை நீக்கியவர் எடப்பாடி பழனிச்சாமி. என்னை நீக்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு நாங்கள் இணைந்து சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தோம். அடுத்த மூன்று நாட்களில் என்னை கட்சியிலிருந்து நீக்கினார். மூன்று நாட்களில் நான் என்ன துரோகம் செய்திருப்பேன். கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஏ 1 என்றால் அவறை கைது செய்யலாம் என திண்டுக்கல் சீனிவாசன் அபருடைய ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

37
விஜையையும் காலி செய்து விடுவார்

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக ஏற்க மனமின்றி பலர் தப்பிக்க பார்த்தார்கள், அவர்களை அழைத்து வந்தது நான் தான். நான், சசிகலா ஆகியோர் கட்சியிலிருந்தால் எடப்பாடி பழனிச்சாமியின் பதவிக்கு ஆபத்து என்பதால் எங்களை கட்சியிலிருந்து நீக்கினார். முதல்வராக்கிய சசிகலாவிற்கே துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்றால் விஜையையும் காலி செய்து விடுவார்.

47
திமுகவின் B டீம் இபிஎஸ்

2021 தேர்தலின் போது தற்போதைய முதல்வர் தான் பழனிச்சாமி ஆட்சியில் ஊழல் பெருக்கடுத்து ஓடுகிறது என கூறினார். கொடநாடு விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்போம் என்றார் ஆனால் பழனிச்சாமி மீது இதுவரை எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக இருப்பது தான் எங்களுக்கு நல்லது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். இதிலிருந்து திமுகவின் B டீமாக செயல்படுபவர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்பது தெரிகிறது.

57
துரோகத்திற்கு நோபல் பரிசு

துரோகத்திற்கு நோபல் பரிசு தர வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் தர வேண்டும். அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் மெளன விரதத்திலும் தியானத்திலும் இருக்கிறார்கள். டெல்லியிலிருந்து யாராவது வந்து அனைவரையும் சேர்த்து விடுவார்கள் என நம்பி கொண்டுள்ளார்கள். வரும் தேர்தலோடு எடப்பாடி பழனிச்சாமியும் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களும் வீழ்ந்து விடுவார்கள் நடக்கப் போவதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கட்சிக்கு நான்தான் வழிகாட்டல் கொடுக்க முடியும் பாஜக கொடுக்க முடியாது.

67
செங்கோட்டையன்

செங்கோட்டையனை நீக்குவதற்கு எடப்பாடி பழனிச்சாமி தகுதியற்றவர். துரோகத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட அதிமுக என்கிற இயக்கம் இன்று துரோகி கையில் சிக்கி உள்ளது அதை அக்கட்சி தொண்டர்கள் உணரவில்லை என்றால் ஆண்டவனாலும் அதிமுகவை காப்பாற்ற முடியாது. அதிமுக-வை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அமமுகவிற்கு இருக்கிறது. EDMKவாக இருக்கும் அந்த கட்சிதை ADMKவாக மாற்றுவோம். செங்கோட்டையன் பட்டியலில் அடுத்தடுத்து யார் இணைய போகிறார்கள் என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள் என்றார்.

77
திமுக ஆட்சி

மேலும் எஸ்.ஐ.ஆர் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை அரசு நடத்தியிருந்தால் கலந்து கொள்வோம். திமுக நடத்தியதால் கலந்து கொள்ளவில்லை. பீகாரில் நடந்த எஸ்.ஐ.ஆரில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக தெரிவித்தனர். பீகாரில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி உள்ளது. அதனால் அங்கு குளறுபடிகள் நடந்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில திமுக ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டு அதிகாரிகள் தான் கணக்கெடுக்க போகிறார்கள். அதை நேர்மறையாக பார்க்கலாம் பயத்தில் பார்க்க தேவையில்லை. திமுக ஆட்சியில் எந்த தவறும் செய்திட முடியாது. தமிழ்நாட்டில எல்லா கட்சிகளும் விழிப்புடன் இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories