ஆசிய இளையோர் கபடி போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கார்த்திகாவுக்கு, நடிகர் மன்சூர் அலிகான் ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 பவுன் தங்கம் பரிசளிப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை கொடுத்துள்ளார். 100 பவுன் தங்கத்தைப் பரிசாகத் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.
பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் கபடி பிரிவில் சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த வீராங்கனை கார்த்திகா தங்க பதக்கம் வென்றார்.
23
மன்சூர் அலிகான் வழங்கி பரிசு
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் கபடி வீராங்கனை கார்த்திகா நேரில் சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் அவரிடம் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார்.
மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 பவுன் தங்கம் பரிசாக வழங்குவதாகவும் மன்சூர் அலிகான் உறுதியளித்துள்ளார். கார்த்திகாவுக்கு தமிழக அரசு ரூ.10 கோடி ஊக்கத்தொகையும் வீடும் வழங்க வேண்டும் என மன்சூர் அலிகானை வலியுறுத்தி இருக்கிறார்.
33
கார்த்திகாவுக்குக் குவியும் பாராட்டு
கபடியில் சிறந்து விளங்கும் கார்த்திகாவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
கார்த்திகாவை நேரில் அழைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். ‘பைசன்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் கார்த்திகாவை நேரில் சந்தித்து ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை கொடுத்தார்.
ஊடகங்களில் பேட்டி அளித்த கார்த்திகா, “நான் 8-வது படிக்கும்போதே கண்ணகி நகரில் கபடி விளையாட்டை தொடங்கினேன். பஹ்ரைனில் நடந்த ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் நாள் துணை கேப்டனாக விளையாடினேன். கண்ணகி நகரை ‘பிராண்ட்’ ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய லட்சியம்” எனத் தெரிவித்துள்ளார்.