அமித் ஷாவுடன் மேடையில் அமர உள்ள 6 முக்கிய தலைவர்கள் யார்? வெளியான லிஸ்ட்

Published : Apr 11, 2025, 01:26 PM ISTUpdated : Apr 11, 2025, 02:56 PM IST

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கூட்டணி குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவில் பிளவு, பாஜகவின் வியூகம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

PREV
14
அமித் ஷாவுடன்  மேடையில் அமர உள்ள 6 முக்கிய தலைவர்கள் யார்? வெளியான லிஸ்ட்

Who are those 6 leaders? On stage with Amit Shah! தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 முதல் 11 மாத காலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் களம் இறங்கியுள்ளது. அதன் படி திமுகவை எதிர்க்க பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

இதற்காக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, கூட்டணி தொடர்பாக பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அதிமுக ஒருங்கிணைந்தால் தான் வெற்றி கிடைக்கும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

24
Amit Shah strategy

பாஜக அதிமுக கூட்டணி

ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி முற்றிலுமாக மறுத்துவிட்டார். அதிமுகவில் ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோரை இணைக்க திட்டம் இல்லையென தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சரும். பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா, கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று காலை 11 மணியளவில் தெலங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக நிர்வாகியுமான தமிழிசை வீட்டிற்கு சென்று அவரது தந்தை குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் தெரிவித்தார்.

34
Amit Shah Tamil Nadu visit

ஆடிட்டர் குருமூர்த்தியோடு சந்திப்பு

இதனையடுத்து  மயிலாப்பூரில் உள்ள துக்ளக் எடிட்டர் ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம், கூட்டணி தொடர்பாகவும், தமிழக மாநில தலைவர் நியமனம் தொடர்பாகவும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்திக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்த மேடையில் தேசிய ஜனநாயக கூட்டணி என பேனரில் அச்சிடப்பட்டுள்ளது. எனவே இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக, பாமக, தேமுதிக கட்சி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

44
political leaders with Amit Shah

அமித்ஷாவுடன் மேடையேறும் தலைவர்கள் யார்.?

திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி பேனர் மாற்றப்பட்டு  தமிழ்நாடு பாஜக என்ற பேனர் வைக்கப்பட்டுள்ளது. எனவே  செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் படி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தற்போதைய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. இருந்த போதும் மேடையில் அமரவுள்ள தலைவர்கள் தொடர்பாக இறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. 

Read more Photos on
click me!

Recommended Stories