Published : Apr 11, 2025, 12:59 PM ISTUpdated : Apr 11, 2025, 01:02 PM IST
DMK Deputy General Secretary Trichy Siva: திமுக அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் துணைப் பொதுச்செயலாளர் பதவியை இழந்தார். அவருக்கு பதிலாக திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
திமுக மூத்த அமைச்சர் மற்றும் துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வந்தவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பொன்முடி. அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அதாவது விடியல் பேருந்து பயணத் திட்டத்தை பற்றி கடந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, பெண்கள் பேருந்தில் ஓசியாக பயணிக்கிறார்கள் என்று கூறி சர்ச்சையில் சிக்கினார்.
25
DMK Ponmudi
உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை
அதேபோல் அரசு விழாவின் போது ஊராட்சி மன்ற தலைவியை அவரது ஜாதியை குறிப்பிட்டு பேசியது, கோரிக்கை தொடர்பாக பெண்கள் அமைச்சர் பொன்முடியிடம் மனு கொடுக்க சென்ற போது தனக்கு ஓட்டு போட்டீங்களா? என கோபமாக பேசியது தொடர்பான வீடியோ வைரலானது. இது முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து அவரிடம் இருந்த உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு வனத்துறை பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் திருவாரூர் தங்கராசு நூற்றாண்டு சென்னை அன்பகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் வனத்துறை அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான பொன்முடி கலந்து கொண்டார். அப்போது சைவ வைணவ சமயங்களை மட்டுமல்லபெண் இனத்தையும் இழிவுபடுத்தும் அளவுக்கு ஆபாசமாக வெளிப்படையாக சிரித்துக்கொண்டே பேசிய வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையானது.
45
Kanimozhi
பொன்முடிவுக்கு கனிமொழி கண்டனம்
இதனையடுத்து திமுக எம்.பி. கனிமொழி உடனடியாக இதுபற்றி முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு சென்றது மட்டுமல்லாமல் பொன்முடியின் ஆபாச பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். அடுத்த சில மணிநேரங்களில் பொன்முடியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சர் பதவி தப்புமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பொன்முடியிடம் இருந்து பறிக்கப்பட்ட துணை பொதுச்செயலாளர் பதவி கட்சியின் மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: கழக சட்டதிட்ட விதி: 17 பிரிவு 3-ன்படி கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் திருச்சி சிவா எம்.பி., அவர்களை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக பதவி பறிப்பு அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் துரைமுருகன் பெயரில் தான் வெளியாகும். ஆனால் இன்றைய பதவி பறிப்பு அறிவிப்பு முதல்வர் ஸ்டாலின் பெயரில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.