பொன்முடி நீக்கத்தால் பயந்து போன துரைமுருகன்.! திடீரென மன்னிப்பு - வெளியான அறிக்கை

Published : Apr 11, 2025, 12:46 PM ISTUpdated : Apr 11, 2025, 12:53 PM IST

திமுக அமைச்சர் பொன்முடி துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். துரைமுருகன் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். திமுகவில் அடுத்தடுத்து சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.

PREV
14
பொன்முடி நீக்கத்தால் பயந்து போன துரைமுருகன்.! திடீரென மன்னிப்பு - வெளியான அறிக்கை

Duraimurugan controversial speech : திமுக மூத்த நிர்வாகியும், அமைச்சருமான பொன்முடி தொடர்ந்து பல்வேறு இடங்களில் சர்ச்சையாக பேசிய நிலையில், இன்று துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதே போன்று பல்வேறு சர்ச்சையில் சிக்குபவர் திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன்,

இவரும் அவ்வப்போது மோசமான கருத்துகளை கூறி வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் கூட்டம் ஒன்றில் பேசும் போது வட மாநில மக்களை பன்னி கூட்டங்களோடு ஒப்பிட்டு பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. 

24
Duraimurugan controversy

மாற்றுத்திறனாளிகளை விமர்சித்த துரைமுருகன்

இதனையடுத்து நேற்று முன்தினம்  துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளையரசனேந்தலில் நடைபெற்ற  தி.மு.க பொதுக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசினார். அதிமுக பாஜக கூட்டணியை விமர்சித்தார். அந்த வகையில் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,வும் தான் கட்சிகள்.

மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அதிமுகவும், பா.ஜகவும் வருகிற சட்டமன்ற தேர்தலில் ஒரே அணியில் சேரும். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுக.வை எதிர்க்கப் பார்க்கின்றனர் என துரைமுருகன்  பேசியிருந்தார். 

34
Ponmudi removal

வருத்தம் தெரிவித்த துரைமுருகன்

அமைச்சர் துரைமுருகனின் இந்த பேச்சு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. இதனிடையே சர்ச்சை பேச்சால் பொன்முடி இன்று பதவியை இழந்த நிலையில்,  மாற்றுத்திறனாளிகள் தொடர்பாக பேசியதற்கு துரைமுருகன் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

44
Duraimurugan disabled

மிகப் பெரிய தவறாகும்

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன். கலைஞரால் வளர்க்கப்பட்ட நானே இப்படிப்பட்ட தவறை செய்தது மிகப் பெரிய தவறாகும்.  மாற்றுத் திறனாளிகள் உள்ளம் புண்பட்டிருக்கும். அதற்காக என் நிபந்தனையற்ற வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைவர் தளபதி, எந்தளவிற்கு வருந்தியிருப்பார் என்பது எனக்குத் தெரியும்.  அவருக்கும் என் வருத்தத்தை தெரிவித்து, இனி இத்தகைய நிகழ்வு நிகழாது என்று உறுதி அளிக்கிறேன் என துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories