ஃபெங்கல் புயல் காரணமாக தமிழக அரசு சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில் போக்கு காட்டி வந்த புயல் மரக்காணம்- மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. சென்னையில் மழை குறைந்த நிலையில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. இதனால், கடந்த சில நாட்களாக மழையால் பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.