cyclone Fengal
தமிழகத்தில் ஃபெங்கல் புயல் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை வெளுத்து வாங்கியது. ஒரே நாளில் கிருஷ்ணகிரி, மயிலம் உள்ளிட்ட இடங்களில் 50 செ.மீ. மழை பெய்ததால் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. ஏரி எது நிலம் தெரியாத அளவுக்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதுமட்டுமல்லாமல் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகியது. இதனால் விவசாயிகள் கண்ணீரில் இருந்து வருகின்றனர்.
Tamilnadu Rain
இந்நிலையில் மீண்டும் மழை மிரட்டப்போகிறதா? என இல்லையா? என்பது குறித்து வானிலை மையம் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது நேற்று காலை, வடதமிழக உள் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடதமிழக மற்றும் தெற்கு கர்நாடக உள் பகுதிகளில் நிலவியது. இது இன்று காலை, கடலோர கர்நாடக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.
இதையும் படிங்க: Sathanur Dam: நாங்க சாத்தனூர் அணையை திறக்கலைன்னா என்ன ஆயிருக்கும் தெரியுமா? துரைமுருகன் சொன்ன பகீர் நியூஸ்!
Rain News
இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Chennai Rain
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
என தெரிவித்துள்ளது.