சென்னைக்கு ரெஸ்ட் கொடுத்த மழை .! மீண்டும் எப்போது - வெதர் மேன் வெளியிட்ட அப்டேட்

First Published | Dec 3, 2024, 1:01 PM IST

ஃபெஞ்சல் புயலால் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டது. இருப்பினும், சென்னையில் குடிநீருக்கான நீர் இருப்பு அதிகரித்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Fengal

புரட்டிப்போட்ட மழை

தமிழகத்தில் குறிப்பாக சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, தரும்புரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களை மழையானது புரட்டிப்போட்டது. ஒரே நாளில் 50 செமீட்டர் அளவிற்கு மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாத்தனூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் அதி கனமழை பெய்ததால் நீர் வரத்து கடந்த 1 ஆம் தேதி முதல் 2 ஆம் தேதி வரை பல லட்சம் கன அடியாக உயர்ந்தது.

இதனையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி  1 அரைலட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆறு வெள்ளம் ஏற்பட்டு விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் மூழ்கியது.

rain damage

நிலச்சரிவு- புதைந்த மக்கள்

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்து சென்றது. அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்களும் முழுமையாக சேதம் அடைந்தது. இதனால் மக்களின் வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் தேசிய மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். 

Tap to resize

RAIN CHENNAI

சென்னையில் நீர் இருப்பு

இந்தநிலையில் "ஃபெஞ்சல்" புயல் காரணமாக சென்னையில் குடிநீருக்கான நீர் இருப்பு அதிகரித்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் சென்னைக்கு அடுத்த ஒரு வாரத்திற்கு மழை ஓய்வு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,  செம்பரம்பாக்கத்தில்  77% நீர் இருப்பு உள்ளதாகவும், ரெட்ஹில்ஸ் ஏரியில் 84% நீர் இருப்பு உள்ளதாக கூறியுள்ளார். . பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் நல்ல மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

heavy rain in tamilnadu

மீண்டும் எப்போது சென்னைக்கு மழை

ஆந்திராவில் உள்ள அம்மாப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் பூண்டி நீர் தேக்கத்திற்கு வருவதால் இன்னும் அதிகளில் நீர் வரத்து அதிகமாகும் என கூறியுள்ளார். இந்த நிலையில் அடுத்த 9 நாட்களில் இது பெரும்பாலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வறட்சியான வானிலையாக இருக்கும் என கூறியுள்ளார்.

Latest Videos

click me!