Tamil Nadu floods
தப்பியது சென்னை- சிக்கியது வட மாவட்டம்
வட கிழக்கு பருவமழை காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒரு சில மாவடங்கள் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு மிக்ஜம் புயல் காரணமாக சென்னையும், அதி கன மழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்தது.
அந்த வகையில் இந்த ஆண்டும் சென்னையை குறிவைத்த "ஃபெஞ்சல்" ஜஸ்ட் மிஸ் ஆகி புதுச்சேரியே பதம் பார்த்தது. வரலாறு காணாத அளவில் மழையானது கொட்டியது. 50 செமீட்டர் மழையின் காரணமாக பல இடங்களில் வீடுகள் முழ்கியது. மக்கள் முதல் மாடியில் தஞ்சம் அடைந்தனர்.
floods
வட மாவட்டங்களில் வெள்ளம்
இந்த "ஃபெஞ்சல்" புயல் நகரும் பாதை முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. ஒரே நாளில் 30 செமீட்டர் முதல் 55 செமீட்டர் வரை மழை பெய்தது. இதனால் வீடுகள் முழுவதுமாக மூழ்கியது.
பல இடங்களில் பயிர்கள் மூழ்கியது. நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். சாத்தனூர் அணையில் பல லட்சம் கன அடி நீர் வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி 1 லட்சம் கன அடிக்கும் மேலாக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு விழுப்புரம், கடலூர் பகுதிகள் மூழ்கியது.
heavy rain in tamilnadu
புதுச்சேரி நிவாரண உதவி அறிவிப்பு
இந்த நிலையில் புதுச்சேரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வெள்ள நிவராண நிதியாக 5ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதே போல தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனையடுத்து வெள்ள பாதிப்பு தொடர்பாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Cyclone Fengal
நிவராண நிதி கேட்ட முதலமைச்சர்
அதில் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களை இதுவரை வரலாறு காணாத அளவில் ஃபெஞ்சல் புயல் சூறையாடி உள்ளதாகவும் இதன் காரணமாக சுமார் 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2.11 லட்சம் ஹெக்டேர் வேளாண் நிலங்கள் வெள்ளத்தில் மூழியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே என்.டி.ஆர்.எப் நிதியிலிருந்து உடனடியாக 2000 கோடி அவசர மீட்பு மற்றும் புனரமைப்பு நடைபெறுவதற்காக விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் வெள்ள பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அவரச ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளார்.
rain damage
வெள்ள நிவராண நிதி
இந்த கூட்டத்தில் வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் தற்போது உள்ள நிலை, மீட்பு பணி நிலை, வெள்ள பாதிப்பு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு நிவராண நிதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.