ஒரே ஒரு மழை.! கிடு கிடுவென உயர்ந்த சென்னை ஏரியின் நீர் மட்டம்.! எவ்வளவு இருக்கு தெரியுமா.?

First Published | Dec 3, 2024, 8:35 AM IST

வடகிழக்குப் பருவமழையால் சென்னையின் குடிநீர் ஆதாரங்களான ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஃபெஞ்சல் புயலுக்குப் பின் 46.99% ஆக இருந்த நீர் இருப்பு தற்போது 60.15% ஆக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரி 7 மாதங்களுக்குப் பிறகு 1 டி.எம்.சி.யை எட்டியுள்ளது.

chennai water

வடகிழக்கு பருவமழையும்- நீர் ஆதாரமும்

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தான் நீர் ஆதாரங்களை அதிகரிக்கும்,  பருவமழை பொய்த்து விட்டால் அவ்வளவு தான் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு குடிக்க தண்ணீர் முதல் விவசாயம் வரை பாதிக்கப்படும் சூழல் உருவாகும் அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நீர் ஆதாரங்களை அதிகரித்து வருகிறது.

மழை ஒரு பக்கம் மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டாலும், வருடம் முழுவதும் குடிக்க தண்ணீர் கொடுப்பது வட கிழக்கு பருவமழை தான், அந்த வகையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஒரு மாதத்துக்கு குறைந்தபட்சம் ஒரு டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. 

tamilnadu rain

சென்னை அணை நீர் இருப்பு பகுதிகள்

சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை ஆகிய அணைகள் உள்ளது. அந்த அணைகளில் நீர் இருப்பை பொறுத்து தான் மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும். மேலும்  நெம்மேலி மற்றும் மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலமாகவும் சென்னை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

எனவே இந்த வடகிழக்கு பருவமழையை மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மழை மட்டும் உரிய வகையில் பெய்யவில்லையென்றால் கடந்த 2019ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு சரக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டுவர வேண்டிய நிலை தான் மீண்டும் ஏற்படும். எனவே மழையை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்

Tap to resize

Chennai Rains

சென்னையில் நீர் இருப்பு நிலவரம்

அந்த வகையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 46.99 சதவிகித நீர் இருப்பு மட்டுமே  "ஃபெஞ்சல்" புயல் மழைக்கு முன்னதாக இருந்தது. தற்போது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக பெய்த மழையின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதரமாக உள்ள ஏரிகளில் நீர்மட்டம் கடகடவென அதிகரித்துள்ளது.

அந்த வகையில், பூண்டி அணையில் முழு கொள்ளளவான 35 அடியில் தற்போது 25 புள்ளி 50 அடி அளவிற்கு நீர் இருப்பு உள்ளது. ரெட்டேரியில் மொத்த கொள்ளளவான 21.200 கன அடியில் தற்போது 18.54 கன அடி நீர் உள்ளது.

DAM

அதிகரித்த நீர் வரத்து

சோழவரம் அணையில் மொத்த கொள்ளளவான18.86 அடியில்,  தற்போது  3.16 அடி நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கத்தில் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது 20.5 4 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. கண்ணகோட்டை மொத்த கொள்ளளவு 36.61 அடியில் தற்போது 31 அடி உயரத்திற்கு தண்ணீர் இருப்புஉள்ளது. வீராணம் ஏரியில் 8.50 கன அடியில் தற்போது 7.10 அடி நீர்மட்டம் உள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளில்  60. 15 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

WATER CHENNAI

உயர்ந்த நீர் மட்டம்

இதனிடையே சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியான பூண்டி ஏரி, 7 மாதங்களுக்குப் பிறகு 1 டி.எம்.சி.யை எட்டியுள்ளது.  ஆரணியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் வெள்ள உபரி நீர், பூண்டி ஏரிக்கு திருப்பி விடப்பட்டதன் காரணமாகவும்,  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் ஏரிக்கு நீர் வரத்து விநாடிக்கு 3690 கன அடியாக தற்போது உள்ளது.

மேலும் தொடர் மழை காரணமாக வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டு 700 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெள்ளியங்கால் ஓடையில் இருந்து நேற்று வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு 700 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!