அதி கன மழையால் தத்தளிக்கும் 8 மாவட்டங்கள்.! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

First Published | Dec 3, 2024, 6:56 AM IST

ஃபெஞ்சல் புயல் தமிழகத்தில் பல மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

FLOOD

புயலால் புரட்டிப்போடப்பட்ட மாவட்டங்கள்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த பருவ காலத்தில் ஏற்பட்ட முதல் புயலான  "ஃபெஞ்சல்" புயல் பல மாவட்டங்களை போட்டு தாக்கியுள்ளது. கடலிலேயே ஆட்டம் காண்பித்த  "ஃபெஞ்சல்" புயல் புதுச்சேரி வழியாக கரையை கடந்தது.

அப்போது சுமார் 50 செமீட்டர் மழையை பதுச்சேரி,  விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி , தருமபுரி என செல்லும் வழி முழுவதும் புரட்டிப்போட்டது. இதனால் பல மாவட்டங்கள் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியது. நிலச்சரிவுகள் ஏற்பட்டு வீடுகள் மண்ணில் புதைந்தது. ஏராளமான உயிர்கள் பலியானது.
 

Rain school leave

கன மழை எச்சரிக்கை

இந்தநிலையில் அடுத்ததாக சேலம், கோவை வழியாக நீலகிரி மாவட்டத்திலும்  "ஃபெஞ்சல்" புயல் சின்னத்தால் மழை வெளுத்து வாங்கியது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், நேற்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் என எச்சரித்தது.இதே போல இன்று  கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது.
 

Tap to resize

Rain school leave

5 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு

"ஃபெஞ்சல்" புயல் பாதிப்பு காரணமாக பல மாவட்டங்களில் இன்னும் கரைபுரண்டு ஓடுகிறது. அணைகளில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டதால் விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களின் வீடுகள் முற்றிலும் மூழ்கியுள்ளது. மேலும் சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

School Holiday

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சேலம், நீலகிரி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்,

Latest Videos

click me!