தமிழகத்தில் அடிச்சு தும்சம் செய்யக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் சூப்பர் அப்டேட்

Published : Oct 10, 2025, 09:31 AM IST

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், காற்றின் திசை அக்டோபர் 16-ல் மாறி, அக்டோபர் 17-19 வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

PREV
14
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வதைப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் கனமழை வெளுத்து வாங்குவதுமாக இருந்து வருகிறது. குறிப்பாக வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24
6 மாவட்டங்களில் இன்று மழை

இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

34
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் அதிக மழை கொடுக்கக்கூடிய வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்க உள்ளது என்ற தகவலை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

44
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிருஷ்ணகிரி - ஈரோடு - திருப்பூர் - கரூர் - சேலம் - தர்மபுரி - திருவண்ணாமலை - நீலகிரி - வேலூர் - ராணிப்பேட்டை - மற்றும் அதை ஒட்டிய திருவள்ளூர் பகுதிகள் அனைத்தும் உட்புறங்களில் ஒருங்கிணைவுடன் இடைநிலைக் காற்று வீசும்.காற்று மேற்கு திசையிலிருந்து மாறி அக்டோபர் 16 ஆம் தேதி வாக்கில் கிழக்கு திசைக்கு முற்றிலும் மாறும், அக்டோபர் 17-19 வாக்கில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories