பாஜகவின் சவகாசமே வேண்டாம்..! விஜயின் தெள்ள தெளிவான முடிவு..! தன்னை தானே ஏமாற்றும் இபிஎஸ்..?

Published : Oct 10, 2025, 08:54 AM IST

நடிகர் விஜய் கட்சி தொடங்கியதும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சு அதை உறுதி செய்வது போல் உள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ முடிவுக்கு முன் தொண்டர்களிடம் எதிர்பார்ப்பை உருவாக்குவது தவறு.

PREV
16
எடப்பாடி பழனிசாமி

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதும் அதிமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கரூர் துயர சம்பவத்தை அடுத்து மீண்டும் அதிமுக - தவெக கூட்டணிக்கு வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வௌியாகி வருகின்றன. அதாவது நாமக்கல்லில் நடந்த எடப்பாடி பழனிசாமி பரப்புரையின் போது தவெக கொடியுடன் தொண்டர்கள் இருந்த நிலையில் அங்கு பாருங்க கொடி பறக்குது பிள்ளையார் சுழி போட்டாங்க. எழுச்சி ஆரவாரம். அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி தான் வலுவான கூட்டணி பேசியிருந்தார். இந்நிலையில் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக இறுதி முடிவு எடுக்கப்படும் முன்பு தொண்டர்கள் மத்தியில் இப்படியொரு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.

26
விஜய் NDA கூட்டணி

அதாவது அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: விஜய் NDA கூட்டணியில் சேர்வதற்கு உண்டான வாய்ப்புகள் மிக குறைவு, கரூர் சம்பவம் குறித்த உச்சநீதிமன்ற மனுவில் கூட CBI விசாரணையை தவிர்த்துவிட்டு ஆஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணையே தொடரட்டும். ஆனால், அது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும் என்று தான் கேட்டிருக்கிறார்கள். எனவே விஜய் பாஜகவின் ஆதரவு வட்டத்திற்குள் சென்றுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் என்று இதன் மூலம் தெரிகிறது.

36
தவெக விஜய்

ஆனால், எதோ சில தொண்டர்கள் தவெக கொடியை பிடித்துக்கொண்டு அதிமுக கூட்டங்களுக்கு வருவதைப் பார்த்து எடப்பாடி தவெக-வுடன் கூட்டணி அமைவது போல பேசுகிறாரா? அல்லது விஜய்யுடன் எடப்பாடி தொலைபேசியில் பேசியதாக சில ஊடக செய்திகள் வந்தன அதை வைத்து இப்படி பேசுகிறாரா? எதுவாக இருந்தாலும் கூட்டணி குறித்து அதிகாரபூர்வமாக இறுதி முடிவு எடுக்கப்படும் முன்பு தொண்டர்கள் மத்தியில் இப்படியொரு ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குவது தவறு.

46
அதிமுக தொண்டர்கள்

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போதும் இதே போலத்தான் "மெகா கூட்டணி உருவாகிறது" என்று ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கினார் எடப்பாடி, ஆனால் அவர் சொன்னது போல் பெரிய அளவு கூட்டணி அமையாத காரணத்தால் தேர்தலுக்கு முன்பே அதிமுக தொண்டர்கள் தோல்வியை உணர்த் தொடங்கினார்கள். இப்பொழுதும் அதே தவறை தான் செய்கிறார் எடப்பாடி பழனிசாமி.

56
திமுக அரசு

'இன்றைய திமுக அரசுக்கு எதிராக அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். அதிமுக தனித்து நின்றாலே வெற்றிபெறும்' என்ற நம்பிக்கையை உருவாக்குவது தான் ஒரு தலைவருக்கான உண்டான தகுதியும், தன்னம்பிக்கையும். ஆனால் மாற்றுக்கட்சியை நம்பி இவர்களெல்லாம் நம் கூட்டணிக்கு வருகிறார்கள், மெகா கூட்டணி உருவாகிறது என்றெல்லாம் பேசுவது தன்னால் தனித்து நின்று திமுகவை வீழ்த்த முடியாது என்று ஒப்புக்கொள்வதற்கு சமம். சென்னையில் அண்ணா பிறந்த நாள் விழாவில் பேசும்போதும் கூட "எனக்கு ஆட்சி முக்கியமல்ல, தன்மானம் தான் முக்கியம்" என்று பேசினார்.

66
கே.சி.பழனிசாமி

இதுபோல தொண்டர்களின் மனஉறுதியை சீர்குலைப்பதும், உறுதிப்படுத்தப்படாத கூட்டணியை நம்பவைத்து கட்சிக்காரர்களின் மனநிலையை சிதைப்பதும் தேர்தல் களத்தில் மிகப்பெரிய பாதிப்புகளை உருவாக்கும். இதை உணர்ந்து செயல்படுவாரா எடப்பாடி பழனிசாமி? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories