விடாமல் அடிக்கும் வெயில்... சென்னையை சுற்றியுள்ள அணைகளின் நிலை என்ன.? நீர்வரத்து அதிகரித்ததா.? குறைந்ததா.?

First Published | May 26, 2024, 9:17 AM IST

கோடை வெயிலின் தாக்கம் சென்னையை அதிகளவு வாட்டி வதைத்து வருகிறது. தென் மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை. இதன் காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நீர்நிலைகளின் நிலை என்ன.? என கேள்வி எழுந்துள்ளது. 
 

பூண்டி ஏரி நீர் இருப்பு என்ன.?

தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் அணைகளின் நிலை தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்,  சென்னையில்  பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவான 3.231 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 0.420 மில்லியன் கன அடியாகவம்,  நீர் வெளியேற்றம் 362 கன அடியாகவும் உள்ளது. 

ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.. உச்சத்தை தொட்ட பீன்ஸ், பூண்டு விலை எவ்வளவு தெரியுமா.?
 

 செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரி நிலை என்ன.?

 செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3630 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 1.873 மில்லியன் கன அடியாக உள்ளது, ஏரிக்கு நீர் வரத்து இல்லை, நீர் வெளியேற்றம் 160 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌.  சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 104 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் வினாடிக்கு 08 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. 

Tap to resize

புழல் ஏரி நிலை என்ன.?

அதேபோல் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மில்லியன் கன அடியில் தற்போது நீர் இருப்பு 2902 மில்லியன் கன அடியாக உள்ளது, ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 290 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 249 கன அடியாகவும் உள்ளது. கண்ணன்கோட்டை ஏரியின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது இருப்பு 328 மில்லியன் கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது‌. 

Kutralam : குற்றாலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதியா.? சுற்றுலா பயணிகள் செல்லலாமா.? லேட்டஸ்ட் அப்டேட் என்ன.?

chembarambakkam

மொத்த ஏரிகளில் நீர் இருப்பு என்ன.?

மொத்தத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளின் மொத்தக் கொள்ளளவான 11,757 மி.கன அடியில் தற்போது 5.627 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest Videos

click me!