ஒரே நாளில் கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி விலை.. உச்சத்தை தொட்ட பீன்ஸ், பூண்டு விலை எவ்வளவு தெரியுமா.?

First Published | May 26, 2024, 8:20 AM IST

சென்னை கோயம்பேடு சந்தைக்கு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து குறைந்ததால் விற்பனை விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

உயரும் தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும்,பச்சை மிளகாய் 80 ரூபாய்க்கும், பீட்ரூட் 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்கள் முன்பு வரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யபட்டு வந்த தக்காளி, இன்று மொத்த விற்பனையில் 40 ரூபாய்க்கும் சில்லறை விற்பனை கடைகளில் 50 முதல் 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. திடீர் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவரைக்காய் விலை என்ன.?

வாழைப்பூ 20 ரூபாய்க்கும், குடைமிளகாய் 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், சுரைக்காய் 30 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 15 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், காலிபிளவர் 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
 

Tap to resize

இஞ்சி ஒரு கிலோ என்ன விலை.?

வெள்ளரிக்காய் ஒரு கிலோ20 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 ரூபாய்க்கும், கொத்தரவரை ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  

Vegetables Price Koyembedu

உச்சத்தை தொட்ட பூண்டு, இஞ்சி விலை.!!

ஒரு கிலோ பீன்ஸ் 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு பீன்ஸ் வரத்து தொடர்ந்து குறைவதன் காரணமாக விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல ஒரு கிலோ பூண்டு 350 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

Latest Videos

click me!