Courtallam : குற்றாலத்தில் அருவியில் குளிக்கலாமா.? மீண்டும் தடை போட்ட ஆட்சியர்.? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

First Published | May 24, 2024, 12:09 PM IST

குற்றாலத்தில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து கடந்த 6 நாட்களாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை முதல் மீண்டும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் மீண்டும் தடை விதிக்கப்பட்டதால்  ஆசையாக அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோடை மழையும் குற்றாலமும்

கோடை வெயிலின் தாக்கம் கடந்த 4 மாதமாக மக்களை வாட்டி வதைத்தது. இந்த வெயிலில் இருந்து தப்பித்துகொள்ள குளுமையான இடங்களை தேடி மக்கள் ஓடினர். அந்த வகையில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என சென்ற மக்கள் அடுத்ததாக குற்றால அருவியில் ஆட்டம் போடலாம் என நினைத்து குற்றாலத்திற்கு வந்தவர்களுக்கு வறண்ட பாறையே காட்சியாக அளித்தது. இந்த நிலையில் தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக கோடை மழையானது தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெளுத்து வாங்கியது. 
 

வெள்ளப்பெருக்கில் சிறுவன் பலி

இதனால் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. வறண்ட பாறையாக காணப்பட்ட குற்றாலத்தில் தண்ணீர் கொட்டோ கொட்டு என கொட்டியது. இதனையடுத்து பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளித்த போது திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி சிறுவன் ஒருவன் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
 

Tap to resize

old coutralam

6 நாட்களுக்கு பிறகு அனுமதி

மேலும் குற்றாலப்பகுதிகளில் உள்ள மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகளில் குளிக்க தடையானது கடந்த 6 நாட்களாக நீடித்தது. ஆனால் அருவிகளில் மிதமான அளவே தண்ணீர் விழுந்தது. எனவே குற்றாலத்தில் குளிக்க அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், உணவு விடுதியாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பல கட்ட ஆய்வுக்கு பிறகு நேற்று மாலை சிற்றருவி, 5அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

coutralam

மீண்டும் தடை போட்ட போலீஸ்

இன்று காலை முதல் மெயின் அருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட இடங்களில் குளிக் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆட்டம் போட்டனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அருவிகளில வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலை உருவானது.

இதனையடுத்து குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. அனுமதி கொடுத்த அடுத்து ஒரு சில மணி நேரத்தில் மீண்டு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

Latest Videos

click me!