magalir urimai thogai
திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி
தமிழகத்தில் 10 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தை பிடிக்க முடியாமல் திணறிய திமுக கடந்த 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. முன்னதாக திமுகவின் தேர்தல் வாக்குறுதி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மகளிர்களுக்கு பேருந்தில் இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என அறிவிப்பு வெளியானது.
மகளிர் உரிமை தொகை
ஆனால் இதில் முக்கிய அறிவிப்பாக அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தான் அந்த அறிவிப்பின் படி கடந்த 2023ஆம் ஆண்டு முதல் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் பயனாளர்களாக சேர்க்கப்பட்டு 2023 ஆண்டு செப்டம்பர் முதல் உரிமைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமை தொகை
அப்போது இன்னும் பல லட்சம் பேருக்கு உரிமை தொகை வழங்கப்படவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டதை ஒரு கோடி 15 லட்சம் பேர் என மாற்றியமைக்கப்பட்டது.
இந்தசூழ்நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி செல்லமிடமெங்கும் மகளிர் உரிமை தொகை தங்களுக்கு கிடைக்கவில்லையென புகாராக தெரிவிக்கப்பட்டது.
புதிய பயனாளிகள்
அப்போதே தேர்தல் முடிவு வந்த பிறகு மகளிர் உரிமை தொகை கிடைக்காதவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி மகளிர் உரிமை தொகையில் புதிய பயனாளிகள் சேர்க்கும் திட்டம் ஜூலை மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மகளிர் உரிமை தொகையில் புதிய விண்ணப்பதாரர்களை பெறுவதற்கான விண்ணப்பங்களை அச்சடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு பெண்களிடம் வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
2.30 லட்சம் பேருக்கு மகளிர் உதவி தொகை
தமிழ்நாட்டில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்கள், புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது