'கூலி' பட சூட்டிங் தொடங்கப்போகுது... அபுதாபி டூ சென்னை ரிட்டர்ன்- விமானநிலையத்தில் கெத்தா வந்து இறங்கிய ரஜினி

First Published | May 23, 2024, 10:41 AM IST

வேட்டையன் படம் சூட்டிங் முடிவடைந்த நிலையில் அபுதாபிக்கு ஓய்வுக்கு சென்ற நடிகர் ரஜினாகாந்த். தனது அடுத்த திரைப்படமாக கூலி திரைப்படத்திற்காக புத்துணர்ச்சியோடு சென்னை திரும்பியுள்ளார். 
 

Lokesh Kanagarajs Rajinikanth Coolie film update out

ரஜினியின் சூப்பர் ஹிட் திரைப்டங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இருந்த போதும் ரஜினியின் அண்ணாத்தே, தர்பார் உள்ளிட்ட  ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இதனையடுத்து இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ரஜினியின் 168 வது படமான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது.  இதனைதொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த லால் சலாம் பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை
 

விறு விறு வேட்டையன்

இந்த நேரத்தில் இளம் இயக்குனர்களிடம் தனக்கு ஏற்ற வகையில் கதையை தேடியே ரஜினி அடுத்தடுத்து படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.  அந்த வகையில் ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் 170 வது படமான வேட்டையன் படப்பிடிப்பு தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் விறு விறுப்பாக நடைபெற்று கடந்த மாதம் முடிவடைந்தது.

100 கோடிலாம் ஒரு மேட்டரே இல்ல.. அதிக வசூல் டாப் 7 ரஜினி படங்கள்.. முதலிடத்தில் எந்த படம் தெரியுமா?

Tap to resize

Rajini

அபுதாபி சென்ற ரஜினி

இதனையடுத்து புதிய படமான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற திரைப்படத்தில் ரஜினி நடிக்க உள்ளார்.  இதற்கான டைட்டில் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. வேட்டையன் படம் முடிவடைந்து  கூலி படம் தொடக்கத்திற்கும் இடையில் ஒரு சில மாதங்கள் இடைவெளி இருந்த நிலையில் ரஜினி ஓய்வு எடுப்பதற்காக அபுதாபிக்கு கடந்த வாரம் சென்று இருந்தார்.
 

ரோல்ஸ் ராய்ஸ் காரில் ரஜினி

அங்கு ஓய்வு எடுப்பதற்காக அமீரகம் சென்ற நடிகர் ரஜினிகாந்த், அபுதாபியில் லுலு குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எம்.ஏ.யூசுப் அலியை சந்தித்து பேசியதுடன், அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் பயணம் செய்தார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மிகப்பெரிய பட்ஜெட் படம்.. ரஜினிகாந்த், நாகார்ஜுனா இருந்தும் அட்டர் பிளாப் ஆன படம் - எது தெரியுமா?

கெத்தா வந்த ரஜினி

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது அபுதாபி சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து தரையிறங்கினார் அப்போது தனது வழக்கமான ஸ்டைலான நடையுடன் வந்த ரஜினிகாந்தை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க உள்ள கூலி திரைப்படம் இன்னும் ஒரு சில நாட்களில் சூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!