Vegetables Price : ஒரு கிலோ பீன்ஸ் 200 ரூபாயா.? இஞ்சி விலையும் அதிகரிப்பு-உச்சத்திலேயே நீடிக்கும் காய்கறி விலை

First Published May 23, 2024, 8:23 AM IST

மழை பாதிப்பு மற்றும் உற்பத்தி குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு குறைவான அளவே காய்கறிகளின் வரத்து வந்துள்ளது. இதன் காரணமாக பீன்ஸ், இஞ்சி, தக்காளி, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. 
 

உயரும் தக்காளி விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 32 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 19 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 முதல் 100 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 15 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

இஞ்சி விலை என்ன.?

மற்ற காய்கறிகளை விட பீன்ஸ் விலை தான் உச்சத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ பீன்ஸ் 160 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனையாகிறது. இஞ்சி ஒரு கிலோ 160 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 4 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

click me!