irfan
இர்பானும் சர்ச்சையும்
பிரபல யூடியூப்பர் இர்பான், இவர் ஓட்டல்களில் உள்ள உணவின் சுவை தொடர்பாக வீடியோக்களை வெளியிட்டு பிரபலமானவர், இவரது வீடியோக்களை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து வருகின்றனர். வெளிநாட்டில் சமைத்துக்கொடுக்கப்படும் முதலை, ஆமை, மான் உள்ளிட்ட உயிரினங்கள் உணவுகளை சாப்பிட்டு பதிவிட்ட வீடியோவானது பல மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்தது. யூடியூப் பிரபலத்தின் மூலம் திரைத்துறையிலும் கால் பதித்து வருகிறார்.
irfan
குழந்தையின் பாலினம் என்ன.?
இந்த சூழ்நிலையில் தான் தனக்கு பிறக்கு போகும் குழந்தையின் பாலினம் தொடர்பான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். துபாய்க்கு தனது மனைவியோடு சென்றிருந்த இர்பான் ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.
நோட்டீஸ் அனுப்பிய மருத்துவ துறை
இதனை தனது நண்பர்களுக்கு பார்ட்டி வைத்து அறிவித்தார். இந்த வீடியோவை தனது யூடியூப் பக்கத்திலும் வெளியிட்ட நிலையில் தற்போது சர்ச்சையில் இர்பான் சிக்கியுள்ளார். இதனையடுத்து வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை இதுதான் என்று அறிவித்த Youtuber இர்பான் மீது பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில் யூடியூபர் இர்பான் விசாரணைக்காக அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினரிடம் வாட்ஸ் அப் மூலமும் மற்றும் தொலைபேசி மூலம் மன்னிப்பு கோரினார்.