குற்றாலத்தில் குளு,குளு சீசன்.. அருவிகளில் கொட்டும் தண்ணீர்- குளிக்க தடை தொடர்கிறதா.? லேட்டஸ்ட் அப்டேட் என்ன.?

First Published May 22, 2024, 11:33 AM IST

குற்றாலத்தில் குளு குளு சீசன் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில்,  சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க 6 வது நாளாக தடை நீடிக்கிறது. இதன் காரணமாக வெளி ஊர்களில் இருந்து ஆவலுடன் குற்றாலத்தில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்
 

old coutralam

கோடை வெயிலும்- குற்றாலமும்

தமிழகத்தில் கடந்த 4 மாதமாக வாட்டி வதைத்த வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஊட்டி, கொடைக்கானலுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதற்கு அடுத்தப்படியாக குற்றாலத்திற்கு சென்றனர். ஆனால் கடும் வெயிலின் காரணமாக வறண்ட பாறையே காட்சி அளித்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
 

coutralam

குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு

இந்தநிலையைலில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் மழை தொடர்ந்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் வர தொடங்கியது. இதனால் உற்சாகமடைந்த மக்கள் அருவிகளில் குளித்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சூழ்நிலையில் மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டது.

அதிர்ச்சியில் மக்கள்.. கிடு,கிடுவென உயர்ந்த காய்கறி விலை- ஒரு கிலோ தக்காளி, பீன்ஸ், கேரட் என்ன விலை தெரியுமா.?

Latest Videos


Courtallam

பலியான சிறுவன்

அப்போது பழைய குற்றாலம் பகுதியில் குளித்துக்கொண்டிருந்த 17வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஷாக் ஆன மாவட்ட நிர்வாகம் குற்றாலம் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகளில் அருவிகளில் குளிக்க முடியாத நிலையானது நீடித்தது.
 

6வது நாளாக தொடரும் தடை

தற்போது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் குளு குளு சீசன் தொடங்கியுள்ளது.  அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க 6 வது நாளாக தடை நீடிக்கிறது வெளியூர்களில் இருந்து ஆர்வமுடன் குற்றாலம் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Vaigai Dam : வைகை அணையில இருந்து தண்ணீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

courtallam old

ரம்மியமாக காட்சி அளிக்கும் குற்றாலம்

மேகமூட்டங்களுடன் மெல்லிய சாரல் மழைத்துளிகளுடன் குற்றாலம் பகுதியில் ஒரு ரம்யமான சூழல் நிலவுகிறது. இருந்த போதும் அருவிகளில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி கொடுக்காமல் தடை தொடர்கிறது. மேலும் அனைத்து அருவிப்பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 

click me!