குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் தான் கடந்த 10நாட்களாக தமிழகத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தென் மாவட்டங்களில் ஏரி, அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது. மேலும் குற்றாலத்தில் உள்ள அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.
இதனால் உற்சாகமாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் ஆட்டம் போட்ட நிலையில், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிறுவன் ஒருவனின் உயிரை பலி வாங்கியது. இதன் காரணமாக குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
Courtallam
அருவிகளில் குளிக்க அனுமதி
கடந்த 8 நாட்களாக குற்றால அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் மீண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் அடுத்த ஒரு சில மணி நேரத்தில் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
manjolai
மாஞ்சோலை செல்ல தடை
இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மணிமுத்தாறு அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு 4வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாஞ்சோலை குதிரை வெட்டி போன்ற சுற்றுலா தளத்துக்கு 9வது நாளாக தடை நீடித்து வருகிறது