PMK vs VCK : தேர்தலில் பாமகவை திட்டம் தீட்டி பழி தீர்த்த விசிக.. சௌமியா அன்புமணி தோல்விக்கு இது தான் காரணமா.?

First Published Jun 6, 2024, 2:12 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த நிலையில் கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார். இதற்கு தரும்புரியில் உள்ள தனித்தொகுதி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 
 

தேர்தலும் முடிவுகளும்

நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில் பல சாதனைகளும்,  அதிர்ச்சி தோல்விகளும் ஏற்பட்டுள்ளது.  அந்த வகையில் 400 தொகுதிகளை வென்று விடுவோம் என பாஜக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி நிலையில் தற்போது 290 தொகுதிகளை மட்டுமே கூட்டணி பலத்தோடு பெற்றுள்ளது.  இருந்தபோதும் பெரும்பான்மை கிடைக்க முடியாமல் கூட்டணி கட்சியை நம்பியே ஆட்சி அமைக்க உள்ளது. 

தமிழகத்தில் 40க்கு 40 வெற்றி

இது ஒரு புறம் இருக்க தமிழகத்தில் பாஜக கூட்டணி 40க்கும் 40 இடங்களில் தோல்வியை தழுவி உள்ளது.  வாக்குப்பதிவு தொடங்கியதில்லை இருந்தே தமிழகத்தில் பாஜக கூட்டணி எந்த தொகுதிகளிலும் முன்னிலை வரவே இல்லை. பாஜக கூட்டணியில் பாமக தருமபுரியில் போட்டியிட்டது.  இந்த தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்தது.  பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி இந்த தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கினார்.  

Latest Videos


தருமபுரியில் இழுபறியான வாக்கு எண்ணிக்கை

13 சுற்று வரை பாமக 15ஆயிரம் முதல் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இருந்தார். ஆனால் அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் திடீரென குறைந்து சௌமியா அன்புமணி தோல்விக்கு  தள்ளப்பட்டார். வாக்கு எண்ணிக்கை முடியும் போது  திமுக வேட்பாளர் மணியிடம் 20,000 வாக்குகள் வித்தியாசத்தில் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தார். 

BJP: அண்ணாமலை மத்திய அமைச்சராகிறாரா.? தமிழகத்தில் இருந்து யாருக்கெல்லாம் பதவி கிடைக்கும்.? வெளியான புதிய தகவல்

தோல்வியை தழுவிய செளமியா

சௌமியா அன்புமணிக்கு தோல்விக்கு என்ன காரணம் என பார்க்கும் பொழுது பாமக எப்போதும் வன்னிய வாக்குகளை கூறிய வைத்தே தர்மபுரி தொகுதியில் போட்டிபோடும், அதே போன்று இந்த முறையும் சௌமியாவை பாமக தரப்பு களம் இறக்கியது.  அந்த வகையில் தருமபுரி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தோல்விக்கான காரணம் தெரியவந்துள்ளது. 

Sowmiya Anbumani

வாக்கு வித்தியாசம் என்ன.?

பாலக்கோடு தொகுதியில் திமுக வேட்பாளர் மணி  71 ஆயிரத்து 344 வாக்குகளை பெற்றிருநாத்ர.  பாமக 60 ஆயிரத்து 878 வாக்குகளை கைப்பற்றியது.  அடுத்ததாக பெண்ணாகரம் தொகுதியில் 64 ஆயிரத்து 581 வாக்குகளை திமுக பெற்றிருந்தது, பாமகவோ 76 ஆயிரத்து 166 வாக்குகளை பறித்து இருந்தது. தருமபுரி தொகுதியில் 66 ஆயிரத்து 2 வாக்குகளை திமுக வேட்பாளர் பெற்றிருந்த நிலையில் பாமக வேட்பாளர் சௌமியா 79 ஆயிரத்து 527 வாக்குகளை பெற்றிருந்தார்.  

டப் கொடுத்த தொகுதிகள்

அடுத்ததாக பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் 73 ஆயிரத்து 700 வாக்குகள் திமுக பெற்றிருந்த நிலையில்,  பாமக வேட்பாளர் சௌமியா 82,434 வாரக்குகளைபெற்றிருந்தார் அடுத்ததாக மேட்டூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 67 ஆயிரத்து 824 வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பாமக வேட்பாளர் 63,265 வாக்குகளை பெற்றிருந்தார். இந்த 5 தொகுதிகள் வரை திமுக மற்றும் பாமக இடையே கடும் போட்டியானது நிலவியது.

EPS vs OPS:தொடர் தோல்வி.! விரக்தியில் தொண்டர்கள்.. ஒன்றிணைய இறங்கி வருவாரா எடப்பாடி.?அடுத்த நடக்கப்போவது என்ன?
 

sowmiya

 கீழே கவுத்திவிட்ட அரூர் தொகு

ஒவ்வொரு சுற்றில் முடிவிலும் ஒருவர் முன்னிலையும் மற்றவருக்கு பின்னடைவையும் சந்தித்தார்கள். இறுதியாக அரூர் தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட போது அனைத்தும் தலைகீழாக மாறியது.  தனி தொகுதியான அரூர் தொகுதியில் திமுக 85ஆயிரத்து 850 வாக்குகள் பெற்றது.  பாமகவை பொருத்தவரை 46,175 வாக்குகள் மட்டுமே பெற்றது.  

ஒரே தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் பாமகவிற்கு பின்னுக்கு தள்ளப்பட்டது.  இதுவே சௌமியா அன்புமணியும் தோல்விக்கு முக்கிய காரணமாகவே பார்க்கப்படுகிறது.  இதே போல தான் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அன்புமணி முன்னிலை நிலையில் அரூர் தனித்தொகுதி  தொகுதி பாமகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது

click me!