வீடியோ எடுத்தவரை விட்டுவிட்டு என்னை பலிகடா ஆக்கியது ஏன்.! நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி சதீஷ் கேள்வி

First Published | Sep 15, 2024, 1:28 PM IST

ஜிஎஸ்டி குறித்த விவாதத்தில் தொழிலதிபர் சீனிவாசனின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் வீடியோவை வெளியிட்ட பாஜக நிர்வாகி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வீடியோவை எடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கிரீம் பன் சர்ச்சை

தமிழகம் மட்டுமல்ல நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் டாபிக் அன்னபூர்ணா கிரீம்பன் செய்தி தான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஜி.எஸ்.டி தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் தொழில்முதலீட்டாளர்களோடு ஆலோசனை நடத்தினார். அப்போது அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அன்னபூர்ணா நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன், ஜிஎஸ்டியில் பல்வேறு குழறுபடிகள் உள்ளது.

பன்னுக்கு 5சதவிகிதம் ஜிஎஸ்டி, கிரீமுக்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி ஆனால் கிரீம் பன்னுக்கு 18 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பதாகவும் இதனால் வாடிக்கையாளர்கள் பிரச்சனை செய்வதாக புகார் தெரிவித்தார். காரத்திற்கும் இனிப்புகளுக்கும் தனித்தனியாக ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் கம்ப்யூட்டரே குழப்பம் அடைந்துள்ளதாக நகைச்சுவையாக பேசியிருந்தார்.
 

மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா உரிமையாளர்

இந்த பேச்சு வேகமாக சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் அடுத்த நாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பாஜக நிர்வாகி வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் நாடு முழுவதும் பரவிய நிலையில்,

ஜிஎஸ்டிக்காக விளக்கம் கேட்ட தொழிலதிபரை மத்திய அமைச்சர் மிரட்டி மன்னிப்பு கேட்கவைத்ததாகவும் செய்திகள் பரவியது. இதற்கு ராகுல் காந்தி, மல்லிகர்ஜூனே கார்கே, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். லண்டனில் இருந்து அண்ணமாலையும் வீடியோ வெளியான சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டு சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

Tap to resize

K Annamalai

பாஜக நிர்வாகி நீக்கம்

அதில், அதில், அன்னபூர்ணா உணவக உரிமையாளர் சீனிவாசனுக்கும், மத்திய அமைச்சருக்கும் இடையே நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பு வீடியோவை பாஜக நிர்வாகி வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சீனிவாசனை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அப்போது எனது வருத்தத்தை தெரிவித்ததாக கூறியுள்ளார்.  

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜகவின் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட கோவை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி சதிஷ் கட்சியின் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக சதீஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவின் வார்டு பொறுப்பில் இருந்து கட்சியில் படிப்படியாக முன்னேறி கட்சியின் இளைஞர் அணி பொறுப்பிற்கு வந்தேன்.

நான் வேலை தெரிஞ்சவ எங்க போனாலும் பொழச்சுப்பேன்; ஆனா அவங்க! பிரியங்காவுக்கு மணிமேகலை தந்த நெத்தியடி ரிப்ளை

பார்வேர்டு செய்ததற்காக நீக்கமா.?

இந்தநிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை நீக்கியுள்ளனர்.  அன்னபூர்ணா உரிமையாளர் மன்னிப்பு கோருவதற்காக  தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது 4 பேர் மட்டுமே அந்த அறையில் உள்ளனர். அதில் 3 பேர் வீடியோவில் இல்லை, எனவே இந்த வீடியோவை எடுத்து மாவட்ட தலைவராகத்தான் இருக்கும் என கூறியுள்ளார்.  இது தொடர்பான கேள்வியை கேட்டு பார்வேர்டு மெசேஜ் வந்தது. இது உண்மையா என சக நிர்வாகியிடம் அந்த மெசேஜ் பார்வேர்டு செய்திருந்தேன்.
 

Nirmala Sitharaman Srinivasan GST

வீடியோவை ரீலிஸ் செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை

ஆனால் பார்வேர்டு மெசேஜ் செய்ததற்காக கட்சி விரோத செயல் என நீக்கப்படிருக்கிறேன். அப்படியென்றால்  இந்த வீடியோவை ரீலிஸ் செய்தது யார், வீடியோவை ரீலிஸ் செய்தவர்கள் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா.? என கேள்வி எழுப்பினார். இந்த சம்பவத்தில் என்மீது எந்தவித தவறும் இல்லையென அண்ணாமலையிடம் நிரூபித்து கட்சி பணியாற்றுவேன். இந்த சம்பவத்தில் என்னை மாவட்ட தலைவர் வீண் பலிகடாவிட்டார். மாவட்ட தலைவர் மீது வருகிற குற்றச்சாட்டை என் மீது திருப்பிவிட்டார். இந்த நிகழ்வில் இருந்து மாவட்ட தலைவர் தப்பிக்க பார்த்துள்ளதாக தெரிவித்துளார். 
 

Latest Videos

click me!