தக்காளி மற்றும் இஞ்சி ஒரு கிலோ என்ன விலை தெரியுமா.? கோயம்பேட்டில் காய்கறி விலை கூடியதா.? குறைந்ததா.?

First Published | Aug 29, 2023, 8:17 AM IST

தக்காளி விலை கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே நேரத்தில் இஞ்சி விலையானது உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

vegetable price hike

காய்கறிகள் விலை என்ன.?

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் இருந்து சென்னையில் பல்வேறு இடங்களுக்கு வாங்கி செல்லப்பட்டு விற்பனையாகிறது. இந்தநிலையில் கோயம்பேடு மொத்த விற்பனை நிலையத்தில் காய்கறிகள் என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பதை தற்போது பார்க்கலாம்...

vegetables

வெங்காய விலை என்ன.?

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கு, சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கும் பச்சை மிளகாய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பீட்ரூட் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும்,  பாகற்காய் 40 ரூபாய்க்கு, சுரக்காய் 20 ரூபாய்க்கும், அவரக்காய் 55 ரூபாய்க்கும், கேரட் 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது

Tap to resize

கத்திரிக்காய், முருங்கைக்காய் விலை என்ன.?

ஒரு கிலோ முருங்கைக்காய் 20 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும்,  பெரிய கத்தரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  பச்சை கத்தரிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இதே போல வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாயும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 40 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

தக்காளி விலை என்ன.?

கடந்த இரண்டு மாதங்களாக உச்சத்தில் இருந்த தக்காளி விலையானது படிப்படியாக குறைந்துள்ளது. தக்காளி வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஐந்து ரூபாய் அதிகரித்து 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இஞ்சி விலை என்ன.?

அதே நேரத்தில் சமையலுக்கு முக்கிய தேவையாக இருப்பது இஞ்சி, இஞ்சின் விலை தான் தொடர்ந்து அதிகரித்து வருகிறது கடந்த இரண்டு மாதமாகவே இஞ்சி நிலை உச்சத்தில் உள்ளது ஒரு கிலோ இஞ்சி ஆனது 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மேலும் சற்று தரம் குறைந்த இஞ்சி 150 முதல் 180 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

இதையும் படியுங்கள்

Power Shutdown in Chennai: சென்னையில் இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் கரண்ட் இருக்காது..!

Latest Videos

click me!