மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிர்மலா அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர். இரண்டாவது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அமுதா, கயல்விழி என்ற மகள்களும் உள்ளனர். காளிமுத்துவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்த கடைசி மகள்தான் கயல்விழி. இவரைத்தான் சீமான் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ்நாடு தமிழர்களுக்குத்தான் என்றும், மற்றவர்களை வந்தேறிகள் என கடுமையான விமர்சனம் செய்யும் சீமானின் மனைவி கயல்விழியின் தாய், தெலுங்கு விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதையொட்டி, சமூக வலைதளங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வார்த்தைப்போர் நிலவியது என்பது நினைவுகூரத்தக்கது.