சர சரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, காய்கறிகளின் விலை என்ன தெரியுமா.?

Published : Aug 28, 2023, 07:08 AM IST

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இஞ்சியானது ரகங்களை பொறுத்து 150 முதல் 200 என்ற விலையில் விற்பனையாகிறது. 

PREV
14
சர சரவென குறைந்த தக்காளி விலை.! கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி, காய்கறிகளின் விலை என்ன தெரியுமா.?
vegetable price

காய்கறிகள் இன்றைய விலை என்ன

காய்கறிகள் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ள நிலையில், சென்னை கோயம்பேட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலையை தற்போது பார்க்கலாம்,  ஒரு கிலோ பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.  இதேபோல பச்சை மிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு, பீட்ரூட் 35  ரூபாய்க்கு, உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

24
vegetables

முருங்கைக்காய் விலை என்ன.?

பாகற்காய் 30 ரூபாய்க்கு அவரைக்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கொத்தவரங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. முருங்கைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 30 மற்றும் 50 ரூபாய்க்கு இரண்டு ரகத்தில் விற்பனை செய்யப்படுகிறது. பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

34

உச்சத்தில் இஞ்சி விலை

கோயம்பேட்டில் மற்ற காய்களின் விலை சற்று குறைந்து இருந்தாலும் இஞ்சியின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிலோ இஞ்சி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை 50 முதல் 60 ரூபாய் என்ற விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது படிப்படியாக உயர்ந்து ஒரு கிலோ இஞ்சி ஆனது 200 ரூபாயை தொட்டுள்ளது. இதனால் இஞ்சியை வாங்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. வரும் நாட்களில் இஞ்சி விலையில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லையெனவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

44
Tomato price

குறையும் தக்காளி விலை

தக்காளி விலையை பொறுத்த வரை கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்து வந்தது.  தக்காளி வரைத்து குறைந்ததன் எதிரொலியாக  கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் என்ற அதிகபட்ச விலையை தொட்டிருந்தது. இந்த நிலையில் தக்காளி விலையானது படிப்படியாக குறைந்து கடந்த ஒரு வாரமாக ஒரு கிலோ தக்காளி 30 ரூபாய் என்ற அளவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் எண்ணிக்கை அளவில் தக்காளியை வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது மூன்று கிலோ 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வாங்கி செல்லும் நிலையானது காணப்படுகிறது. அதே நேரத்தில் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனையாகிறது. 
 

click me!

Recommended Stories