Power Shutdown in Chennai: சென்னையில் இன்றுமின் தடை.! உங்க ஏரியாவும் இருக்கா.?மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்

Published : Aug 28, 2023, 06:07 AM IST

மின்சார பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் கிண்டி, தாம்பரம், தண்டையார் பேட்டை உள்ளிட்ட இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பபதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

PREV
13
Power Shutdown in Chennai: சென்னையில் இன்றுமின் தடை.! உங்க ஏரியாவும் இருக்கா.?மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
power cut

பராமரிப்பு பணி- மின் தடை

மின் பாதை சரிசெய்யும் பணி, துணை மின் நிலைய பராமரிப்பு,  மின் கம்பம் நடும் பணி உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக பராமரிப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மின் தடை செய்யப்படவுள்ள இடங்களின் பட்டியலை வெளியிடப்படும்.

இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (28.08.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

23

கிண்டி: 
ராமபுரம் முகலிவாக்கம், டிவி நகர், பூந்தமல்லி மெயின் ரோடு, நந்தம்பாக்கம், அண்ணா மெயின் ரோடு, கொளப்பாக்கம் கிராமம், பல்லாவரம் மெயின் ரோடு, நாராயண நகர், ராலயா நகர் 1 முதல் 6 தெரு, காமராஜர் சாலை, ராஜீவ் காந்தி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

தாம்பரம்:  
MAPPEDU படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்யா நகர், குறிஞ்சி நகர் மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

33

தண்டையார் பேட்டை : 
நேதாஜி நகர், குமரன் நகர், அன்னை சத்யா நகர், பேசின்ரோடு, இந்திராகாந்தி நகர், சிஐஎஸ்எஃப் குவார்ட்டர்ஸ், எழில் நகர், மணலி சாலை, மீனாம்பாள் நகர், ஜேஜே நகர், மாதாகோவில் தெரு, காமராஜ் நகர், புதிய சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணிக்கு மின் தடை செய்யப்பட்டு மதியம் 2 மணி வரை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

மெரினா கடற்கரை நீச்சல் குளத்தில் குளித்த 5வயது சிறுவன் மூச்சு திணறி பலி.! விசாரணை நடத்த உத்தரவிட்ட முதலமைச்சர்

Read more Photos on
click me!

Recommended Stories